சதுர்காலபைரவர்

சதுர்காலபைரவர்


      தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில்,கும்பகோணத்திற்கு கிழக்கே 6 km தொலைவில்திருவீசநல்லூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கு சௌந்திர நாயகி உடனுறை சிவயோகி நாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில்,திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சதுர்காலபைரவர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு மக்களின் ஆயுட்காலம்120 ஆண்டுகளாக இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்வை நான்காகப் பிரித்திருந்தனர். இதன் அடிப்படையில் இங்கு ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒரு பைரவர் என்ற விதத்தில் நான்கு பைரவர்கள் இங்கே உள்ளனர். அவை முறையேமுதல் கட்டத்தில் முதல் 30 ஆண்டுகள் ஞானம் பெரும் நோக்கத்தில் ஞான பைரவரை வணங்க வேண்டும். அடுத்த இரண்டாம்கட்டத்தில் 31 முதல்60 வயது வரை மகாலட்சுமி சன்னதியின் எதிரே திருவாட்சியுடன் காட்சி தரும்ஸ்வர்ணஆகர்ஷண பைரவரை மூன்றாம் கட்டத்தில் 61 முதல் 90வயது வரை உள்ள காலத்திற்கு உன்மத்த பைரவரை வணங்கவேண்டும்.

            நான்காம் கட்டத்தில் 91 முதல் 120 வரை உள்ள காலத்திற்கு யோக பைரவரை வணங்க வேண்டும். இவ்வாறாக இத்திருக்கோயிலில் ஞானபைரவர்ஸ்வர்ணஆகர்ஷண பைரவர்,உன்மத்த பைரவர்யோக பைரவர் என நான்கு வடிவங்களில் பைரவர் அமைந்துள்ளது வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.

        மனிதனின் ஆயுள் காலத்தைப் பிரித்து அவன் எப்படி வாழ வேண்டும் அந்தந்த வயதில் என்னென்ன செய்யவேண்டும் என்பன போன்ற விளக்கங்களை உலகிற்கு எடுத்துக்காட்டியதோடு மட்டும் அல்லாமல் வாழ்ந்தும் காட்டி  திருக்கோயில்களை தன் வாழ்வின் ஒரு பகுதியாக அமைத்து வாழ்ந்தது தமிழனின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் செயல்.எனவே. அந்த நல்ல மனிதர்களை நினைத்தது வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment