இந்திராணி

இந்திராணி
Temple images

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் இந்திராணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், தருமபுரம் அருள்மிகு அபயாம்பிகை சமேத தருமபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். குருஞானசம்பந்தரால் நிறுவப்பெற்ற புகழ்பெற்ற தருமை ஆதீனம் இங்குள்ளது. தருமராஜா பூஜித்தது. எமன் சிவபிரானை வழிபடும் திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. பதினெண்கரங்களோடு கூடிய துர்கை ஆலயம் இங்கு உள்ளது.
சந்திரனின் சாப நீக்கம் பெற்ற தலமும் கூட, மனோகாரகன் எனும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் சந்திரன், மனிதனின் மனத்தைக் குறிப்பிடுபவன். கலைகள், கற்பனைத் திறன் இவையெல்லாம் சந்திரனைப் பொறுத்தே அமைகின்றன. அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த பெருமான், அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர். பசுபதி கோயில் எனும் ஊரில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி கோயில் கொண்டுள்ளார். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பசுபதி கோயில் ஊருக்கு முன்பாக, சாலையிலிருந்து சற்று விலகி கிழக்குநோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம். அம்பாள் ஆதி மூல அம்பிகையாக, மகாராணியாக, ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். சப்த மங்கை தலங்களுள் பல்வேறு சிறப்புகளைப் பெற்று தனித்து விளங்குகிறது இந்தத் தாழமங்கை.
சப்த மங்கையர்களின் இந்திராணி எனப்படும் தாழமங்கை, தங்கியிருந்து வழிபட்ட சிவாலயம். அதனாலேயே கோயிலின் பெயர்கூட, தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம் என்றுதான் இன்றுவரை பேச்சு வழக்கில் உலவுகிறது.
இந்திராணி, இந்திரன் அம்சம் உடையவள். இரண்டு கண்கள் உடையவள். அழகிய ஆடை பூண்டவள். வரதம், அபயம் உடையவள். யானைக்கொடி, யானை வாகனம் உடையவள்.
மயிலாடுதுறை செம்பொனார் கோயில் பேருந்துச்சாலையில் உள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
இந்திராணி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் - ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் - சக்தியையும் - இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள். இந்திரன் தேவலோக அரசன் - எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் - பதவிகளை அடையலாம்!
இந்திராணி பாடல்: கரம் விராய வச்சிரக் கவின்பெற்ற இந்திராணி
தரம் விராயபல்லுயிர்க்கு நன்கருள் திருத் தரும
புரம் விராய அற்புதன் அடிப்பூசனை புரிந்தாள்
பரம் விராய பல் வரங்களும் பண்புறப் பெற்றாள்.
இந்திராணி ஐந்தரி பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - இந்திராணி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - இம் - இந்திராணி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - தம் - இம் - இந்திராணியே - நம:
காயத்ரி: ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத் ராம்;
ச சதுர்புஜ ஸமன் விதாம்;
ஸ ரத்ன மகுடோபேதாம்,
ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;
வராபயகராம், போஜாம்,
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :
அர்ச்சனை: ஓம் இந்த்ராயை நம
ஓம் தேவேந்திராயை நம
ஓம் மகேந்த்ரியாயை நம
ஓம் ஐராவதரூடாயை நம
ஓம் சகஸ்ரநேத்ராயை நம
ஓம் சதமன்யவேயை நம
ஓம் புரந்தராயை நம
ஓம் த்ரிலோகாதிபதாயை நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் சசிநாமாயை நம
ஓம் வாஸ்தோபதாயை நம
ஓம் திக்பாலநாயகியை நம
ஓம் கர்மதேனு சமன்விதாயை நம
ஓம் வாச வாயை நம
ஓம் சத்ய வாதிநேயை நம
ஓம் சூப்ரீ தாயை நம
ஓம் வஜ்ரதேகாயை நம
ஓம் வஜ்ரஹஸ்தாயை நம
ஓம் பஷணாயை நம
ஓம் அநகாயை நம
ஓம் புலோமஜிதேயை நம
ஓம் பலிதர்ப்பக்நாயை நம
ஓம் யக்ஷ சேவ்யாயை நம
ஓம் வேதபர்வநாயை நம
ஓம் இந்த்ரப்ரியாயை நம
ஓம் வாலி ஜநகாயை நம
ஓம் புண்யாத்மநேயை நம
ஓம் விஷ்ணு பக்தாயை நம
ஓம் ருத்ர பூஜிதாயை நம
ஓம் ராஜேந்திராயை நம
ஓம் கல்பத்தருமேசாயை நம
ஓம் நமுச்சயேயை நம
ஓம் யஞ்ஞப்ரீதாயை நம
ஓம் யஞ்ஞசோசநாயை நம
ஓம் மாந்தாயயை நம
ஓம் தாந்தாயயை நம
ஓம் ருது தாம்நேயை நம
ஓம் சத்யாத்மநேயை நம
ஓம் புருஷ சூக்தாயை நம
ஓம் புண்டரீகாஷாயை நம
ஓம் பீதாம் பராயை நம
ஓம் மகா பராயை நம
ஓம் ப்ரஹ்மவித்யாயை நம
ஓம் சர்வாபரணபூசிதாயை நம
ஓம் சுப ரூபாயை நம
ஓம் சந்த்ரவர்ணாயை நம
ஓம் களாதராயை நம
ஓம் இந்த்ரரூபிண்யை நம
ஓம் இந்த்ர சக்த்யை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் லோக மாத்ரேயை நம
ஓம் சுகாசனாயை நம
ஓம் காஞ்ச நாயை நம
ஓம் புஷ்பஹராயை நம
ஓம் பதிவ்ரதாயை நம
ஓம் ஹேமாவத்யை நம
ஓம் பஹாவர்ணாயை நம
ஓம் பங்கள காரிண்யை நம
ஓம் தயாரூபிண்யை நம
ஓம் பரா தேவ்யை நம
ஓம் சித்திதாயை நம
ஓம் திவ்யாயை நம
ஓம் சத்யப்ரபாயை நம
ஓம் சத்யோசாதாயை நம
ஓம் யோகின்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் இந்த்ர லோகாயை நம
ஓம் சாம்ராஜ்யாயை நம
ஓம் வேத சாராயை நம
ஓம் அம்ரகாணாம்யை நம
ஓம் அணிமாயை நம
ஓம் சுப ரூபாயை நம
ஓம் புராதன்யை நம
ஓம் ஹேமபூசணாயை நம
ஓம் சர்வ நாயகியை நம
ஓம் கப காயை நம
ஓம் உச்சைஸ்வர ரூடாயை நம
ஓம் சிந்தாமணி சமாயதாயை நம
ஓம் அஹிப்ரியாயை நம
ஓம் தர்மஸ்ரீலாயை நம
ஓம் சர்வ நாயகாயை நம
ஓம் நகாராயை நம
ஓம் காஸ்யபேயாயை நம
ஓம் ஹராயை நம
ஓம் ஜயந்த்ஜநகாயை நம
ஓம் உபேந்தபூர்வசாயை நம
ஓம் மகவதேயை நம
ஓம் பர்ஜன்யாயை நம
ஓம் சூதா ஹாராயை நம
ஓம் திவ்ய ரத்ன கிரீடாயை நம
ஓம் ஸ்ரீயவர்த்தநாயை நம
ஓம் ஹரிஹராயை நம
ஓம் சண்டவிக்ரமாயை நம
ஓம் வேதாங்காயை நம
ஓம் பாகசாசநாயை நம
ஓம் அதிதிநந்தநாயை நம
ஓம் ஹவிர்போக்த்ரேயை நம
ஓம் சகல பக்ஷப்ரபேதாயை நம
ஓம் நிர்மலா சயாயை நம
ஓம் ஆகண்டலாயை நம
ஓம் மருத்வதேயை நம
ஓம் மகா மாயினேயை நம
ஓம் பூர்ண சந்த்ராயை நம
ஓம் லோகாத்யக்ஷõயை நம
ஓம் சூராத்யக்ஷõயை நம
ஓம் குணத்ரயாயை நம
ஓம் ப்ராண சக்த்யை நம
ஓம் ஐந்த்ரியாயை நம
ஸ்ரீஇந்திராணி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.
துதி: கிரீடினி மஹா வஜ்ரே
ஸஹஸ்ர நயனோ ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரி
மகேந்த்ரி நமோஸ்துதே.
ஆன்மீகச்சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி 

No comments:

Post a Comment