பெண்களின் ருது தோஷங்களை போக்கும் ஆண்டான் கோவில்

ஸ்தல வரலாறு:

பக்தரின் அன்பிற்கு இறைவன் காட்சியருளிய சம்பவங்களும் நடைப்பெற்று உள்ளது. இத்தகைய கோவில்களில் ஒன்றுதான் திருக்கடுவாய்கரைபுத்தூர் என்னும்  ஆண்டான்கோவில் காவிரி தென்கரை தளம் 97–வது தலமாக 7–ம் நூற்றாண்டுக்கு முன்பு இக்கோவில் இருந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.


புராதன காலத்தில் காசியப முனிவர் தவமியற்றி சிவபெருமானையும் அம்பிகை பார்வதியையும் தரிசிக்கும் பேர் பெற்ற மிக பழமையான கோவிலாகும். தவ  முனிவர் ஒருவரின் புத்திரன் ஒரு சிறு தவறுக்காக தந்தை கொடுத்த சாபத்தினால் கண்டதேவர் என்ற பெயரோடு மீண்டும் இப்பூவுலகில் மறுபிறவி எடுத்து  அன்றைய சோழ மன்னரான முகுந்த சக்ரவர்த்தியின் அமைச்சராக ஆனார்.

சிறு வயது முதல் இறைவன் மீது அளவற்ற பக்தி கொண்டவராக வளர்ந்து வந்ததால் திருக்கயிலை பெருமாளுக்கும் அன்னை உமைக்கும் எவ்விடமாவது ஒர்  கோவில் கட்ட வேண்டும் என்ற பேராவல் இருந்து வந்தது. ஆனால் அவர் ஆசைபட்ட அளவிற்கு கோவில் அமைப்பதென்றால் பெரும் பொருள் தேவைபட்டது.  அதற்கு முகுந்த சக்கரவர்த்தி சம்மதிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்டார்.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் கட்டுமானபணி நடைப்பெற்று வந்த சமயத்தில் வலங்கைமான் வழியாக ஆண்டான்கோவில் வழியாக பாறைகற்களும்  சுண்ணாம்புகள் போன்ற கட்டுமானபொருட்கள் சென்று கொண்டிருந்தன.

இப்பணியினை மேற்பார்வையிட்டு வந்த அமைச்சராக இருந்த கண்ட தேவர் நடுநிசி ஆனதால் ஆண்டான்கோவிலில் தங்கும் நிலை ஏற்பட்டது. படுத்து  உறங்குவதற்கு முன் இறைவனை வணங்கி உறங்குவது வழக்கம் ஆனால் அங்கே சிவாலயம் எதுவும் இருப்பதாக அவருக்கு தெரியவில்லை. மனதுக்குள்  இறைவனை நினைத்தவாறு உறங்க ஆரம்பித்தார்.

அப்போது அசீரியாக இறைவன் தான் இங்கே புதர்களுக்குள் புதர்மண்டி மூடி இருப்பதாகவும் அங்கு தனக்கு ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும் எனவும் குரல்  வந்துள்ளது. விடிந்ததும் இறைவன் இரவு கூறிய இடத்தில் சென்று பார்த்தபோது அங்கே சுயம்பு லிங்க வடிவமாக இறைவன் வீற்றிருப்பது தெரியவந்தது.

அங்கு ஆலயம் கட்ட தீர்மானித்து திருவாரூருக்கு செல்லும் கட்டுமானபொருட்களில் கல் சுண்ணாம்பு போன்றவைகளை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து  மன்னருக்கு தெரியாமல் சிறியதாக அங்கே ஒரு சிவாலயத்தை அமைச்சர் சுண்டதேவர் நிர்மாணித்தார். இருந்தாலும் முகுந்த சக்கரவர்த்தியும் தெய்வபக்தி  நிறைந்தவரானதால் மன்னர் அறியாமல் திருக்கோவிலை கட்டிய குற்றத்தை பொறுத்தருள்வார் என உறுதியாக நம்பினார்.

அமைச்சர் கண்டதேவர் மேலும் நேர்மையிலும் ஒழுக்கத்திலும் பக்தியிலும் உயர்ந்தவராகவும் மன்னர் மீது ஆழ்ந்த விசுவாசமாகவும் நாட்டுமக்கள் மீது பற்று  வைத்து இருந்தார். முகுந்த மன்னருக்கும் அமைச்சரிடம் அன்பும் ஒரு மரியாதையும் இருந்து வந்தது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மன்னருக்கு  தெரியாமல் கட்டிய கோவிலை பற்றி அவரிடம் தெரிவித்தார் சுண்டதேவர்.

விஷயத்தை கேட்டதும் அமைச்சர் செல்வாக்கை பயன்படுத்தி தன்னிடமிருந்து மறைத்து கோவில் கட்டியது மாபெரும் குற்றமென சினம் கொண்டார். முகுந்த  சக்கரவர்த்தி சட்டம் என்பதும் அமைச்சருக்கும் பொருந்தும். நாட்டில் எது நடந்தாலும் மன்னருக்கு தெரிவிக்க வேண்டும்.

அமைச்சரே இவ்வாறு நடந்து கொண்டால் மக்களுக்கு தான் மன்னரிடம் என்ன மரியாதை இருக்க முடியும். மந்திரியை விட நாட்டின் சட்டம் முக்கியம். எவரும்  சட்டத்திற்கு புறம்பானவர்கள் அல்ல. இதனையே நினைத்து நினைத்து தன் மதியை இழந்தார் மன்னர். காவலாளிகளை அழைத்து சுண்டதேவரை கோவில்  அமைத்த இடத்திலேயே சிரைச்சேதம் செய்துவிடுமாறு கட்டளையிட்டார். கண்ட தேவரை கொலைகளத்திற்கு கொண்டுசென்றனர்.

கண்களை மூடிய வண்ணம் இருகரம் கூப்பி மனதை அம்பிகை பாகனின் திருவடிகளில் இணைத்து ஒம் நமச்சிவாய ஓம் நமச்சியவாய எனும் பஞ்சாட்ச  மந்திரத்தை ஓதியபடி இறைவனின் நினைவில் தன்னை மறந்து மரணத்திற்கு சிறிதளவும் அஞ்சாமல் காவலாளிகளின் கட்டளைபடி மண்டியிட்டு  சிரைச்சேதத்திற்கு வசதியாக தனது தலையை பலிகட்டையின் மீது வைத்தார். வாளை ஓங்கி வெட்டியதும் தலை தெறித்து ஆண்டவனே என்றவாறு ஆலயத்தின்  உள்ளே இருந்த சிவனிடம் ஓடியது.

அங்கே பொன்மயமாக ஈஸ்வரனும் அம்பிகையும் தோன்றி பழைய நிலைமைக்கு வந்த சுண்டத்தேவரை அம்மையும் அப்பனும் காட்சிதருவதை கண்டு கண்ட  தேவர் மெய்சிலிர்த்து கண்களில் கண்ணீர் மெல்க கரம் குவித்து மெய்சிலிர்த்து நின்றார். இடப வாகனத்தில் இருந்து இறங்கிய பெருமான் அம்பிகையுடன்  அமைச்சர் சுண்டத்தேவருக்கு அருகில் எழுந்தருளி தனது வலது திருக்கரத்தை நீட்டி தனக்கு கோவில் அமைத்த ஈடு இணையற்ற அந்த பக்தனை கைகோர்த்து  தன்னிடம் இணைத்துகொண்டார். அய்யனிடம் ஐக்கியமாகி ஒன்றானார் சுண்டத்தேவர் மாமுனிவர்களுக்கு கூட கிடைக்காத மாபெரும் பேர் கிடைத்தது  சுண்டத்தேவருக்கு. இச்செய்தி அறிந்த முகுந்த சக்ரவர்த்தி ஓடோடி வந்தார்.

ஆனால் அதற்குள் அம்மையப்பன் தன் தேவியோடு திருக்கோவில் கருவறை உள்ளே சென்று மறைந்துவிட்டார். தன் தவற்றை உணர்ந்து செய்வறியாது  திகைத்து நின்றார் முகுந்த சக்ரவர்த்தி. தன் பிழையை பொறுத்தருளுமாறு சுயம்பு லிங்கமாக காட்சியளித்த பெருமானை கட்டிகொண்டு கதறினார்.

அப்போது இறைவன் அசரீரியாக இக்கோவிலை தான் புனரமைக்க வேண்டும் என்றும் காலத்தினால் சிதலமடைந்தாலும் தான் எழுந்தருளியுள்ள சன்னதிகளை  சீரமைக்க வேண்டும். திருக்கோவிலில் தீபம் ஏற்றுவது ஆகிய எல்லையற்ற புண்ணிய பலன்களை எடுத்தருளினார். ஈரேழு 14 உலகங்களுக்கும் நாயகனான ஸ்ரீ  சுவர்ணபுரீஸ்வரர் சுண்டத்தேவருக்கு காட்சியருளியபோது அந்நகரமே தங்கமயமாக காட்சியளித்தால் அன்றிலிருந்து அவ்வூர் சொர்ணபூமியாகவும் இறைவன்  சொர்ணபுரீஸ்வரராகவும் தேவி சொர்ணாம்பிகை என்றும் வழிபட தொடங்கினர்.

இத்தலத்தின் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை மிகுந்த வரபிரசாதி. இத்தாய்க்கு ஒரு தனிசிறப்பு உண்டு. பெண்களுக்கு ருது பரிகாரத்தினை அனுக்கிரகம் செய்யும்  தாய் இவள் திருமணத்தடைகளை போக்குவதற்கும். மழலை பேற்றினை அளிப்பதற்கும் சில குறிப்பிட்ட தலங்கள் உள்ளன.

ஆனால் பெண்களின் ருது (பூப்பெய்தல்) சம்பந்தமான தோஷங்களை போக்கும் பரிகார ஸ்தலம் திருக்கடுவாய்துரை தென்புத்துர் எனப்படும் ஆண்டான்கோவில்.  இத்திருத்தலத்தில் உள்ள தெய்வீக காப்புடைய சூலமங்கை திருத்தலத்தில் தொடர்ந்து 7 திங்கட்கிழமை நீராடி கோவிலை வலம் வந்து இறைவனையும்  அம்பிகையையும் பக்தியுடன் வழிபட்டு வந்தால் விரைவில் பெண்கள் பூப்பெய்வார்கள். ருது ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அத்தகைய பெண்களும்  இப்பரிகாரத்தை செய்து நன்மை அடையலாம்.

இத்தகைய சக்தியை இக்கோவிலுக்கு அளிப்பது அம்பிகையின் கருவறையினுள் மந்திர பிரதிஸ்டை செய்யபட்டுள்ள அளவற்ற சக்திவாய்ந்த விசேஷ  சக்கரங்களாகும்.  மக்களை பெரிதும் துன்புறுத்தி வந்த கும்பகர்ணனை அம்பிகை கேட்டுகொண்டபடி இலங்கைக்கு அப்பால் வீசியெறிந்த இத்தலத்தை விநாயக  பெருமான் கும்பகர்ண பிள்ளையார் என தரிசனம் அளிக்கிறார்.

இவ்வாலயத்தில் கருவறையில் சுவர்ணபுரீஸ் வரரும் பிரகார களத்தில் உத்திர கயிலாசர் வள்ளி தெய்வாணை உடனாய சுப்ரமணியர் மகாலெட்சுமி,  அருணாச்லேஸ்வரர், விஸ்வநாதர், விசாலாட்சி, சண்டிகேஸ்வரர், ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர், சுந்தரர்  ஆகியோரும் உள்ளனர். தெற்கு நோக்கிய தனி சன்னதியில் துவார பாலகியர் காவல் காக்க ஸ்ரீசுவர்ணாம்பிகை தனிசன்னதியில் அருள்பாலிக்கிறார்.

அச்சமாலை, தாமரை அபயம் ஊர்துவம் தாங்கிய திருக்கரங்கள் அணிகலன்கள், பூண்டு 6 அடி உயரத்தில் அம்மன் தரிசனம் தருகிறார். பிரகாரம் முடிவில்  சண்டிகேஸ்வரி, பைரவர், சூரியன், சந்திரன், தனி தெட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், சைவ மூவர் அமர்ந்த நிலையில் மாணிக்கவாசகர் சேக்கிலார் என  வழிபாட்டுக்குரிய விக்ரகங்கள் உள்ளன.

இத்திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானிலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவிலும், குடவாசலிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலும் உள்ளது.

No comments:

Post a Comment