முறியாத வியாதிகளையும் முறித்து போடும் நெல்லையப்பர் உறையும் மூங்கில்
ஆன்மீக சிந்தனையில் அடியேன்  கணேசன் பாண்டிச்சேரி

                          மானுட தேகம் பஞ்சபூதங்களால் பிசைந்து கட்டப்பட்ட ஓர் கட்டிடம் என்பதை நாம் ஒரு போதும் மறத்தல் ஆகாது. பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் எனும் பூதமே, நமது இயக்கத்தின் மூலப் பொருளாய் அமைந்துள்ளது. ஒருவர் தேகத்தில் நீரின் இயக்கம் குறையும் பொழுது தான் வறட்சி நோய்கள் வர ஆரம்பிக்கிறது. ஆக, நீரின்றி அமையாது உடம்பும்கூட!

தவ வலிமையால் சிவனை உணர்ந்த சித்தர் கள், தாங்கள் மெய்ம்மறந்த நிலையில் மெய்யைப் பற்றிய உண்மைகளை மானுட மேன்மைக்காகச் சுவடிகளில் தொகுத்தளித்துள்ளார்கள். அவர் கள் நீரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆற்றுநீர், குளத்துநீர், தாமரைக்குளத்துநீர், வைகையாற்று நீர், காவிரி நீர், கங்கை நீர், தாமிரபரணியாற்று நீர் என்று வகைப்படுத்திக் காட்டுகிறார்கள்.

நீரின் பொதுக்குணம் ஒன்றாக இருப்பினும், அது தவழ்ந்து பாயும் இடத்திற்கு ஏற்ப அதன் குணம் மாறுபடும் என்று சித்தர்கள் குறிப் பிடுகின்றனர். தாமிரபரணி நதிநீர் பற்றிய சித்தர்களின் பாடலை சற்று கவனியுங்கள்.

"தாம்மிரபர ணிபுனலாற் சர்வசுரம் பித்துவிழித்

தூம்பிரமுட் காய்ச்சல், சுவாசநோய்- தேம்பிமிகக்

கக்குகய மென்புருக்கி கைகா லெரிவுடனே

மிக்குறுதா கங்களும் விள்போம்.'

அதாவது தாமிரபரணியாற்று நீரைப் பருகி னால் பலவிதமான சுரநோய்கள், பித்ததோஷம், கண்புகைச்சல், உள்சுரம், சுவாச நோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிச்சல், அதிதாகம் ஆகியவை விலகும் என்பதே இப்பாடலின் கருத்தாம்.

இவ்வளவு மருத்துவ குணங்களைத் தன்னுள் அடக்கி தவழ்ந்து பாயும் தாமிரபரணியின் வடகரையில் அமர்ந்துதான் நெல்லையப்பர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அவரு டைய தீட்சண்யம், அருள் பார்வை அத்தனையும் தாமிரபரணிக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தாமிரபரணியாற்றின் வடகரையில் எழுந்தருளியிருக்கும் நெல்லையப்பர், வேணுவனநாதர், காந்தியம்மை, வடிவுடைமங்கை ஆலயத்தை ஒரு முறை தரிசித்து, ஐயனின் அருட் பயனை உணருங்கள். அப்படியே அங்கு தல விருட்ஷமாய் வளர்ந்திருக்கும் மூங்கில் மரத்தினை வலம் வந்து, நோய் நீங்கி நூறாண்டு வாழ வேண்டிக்கொள்ளுங்கள். மூங்கிலை சாட்சாத் அந்த நெல்லையப்பராகவே காணுங்கள். உயிரெ னும் நாதத்தை புல்லாங்குழலின் சப்தமாய் எழுப் பும் சக்தி மூங்கிலுக்கே உரித்தாகும். அத்தகைய மூங்கிலைச் சரணடைந்து, உடல் நலமடைய வேண்டிய மருந்துகளை அறிவோம்.

பொதிகை வனத்தில் செறிந்து காணப்படும் மூங்கில் காடுகளில் மழையாய் பொழிந்து, பெருகி, தாமிரபரணியாய் தரணியாளும் நதியின் மறைபொருளே மூங்கிலென்றால் மிகையில்லை. வாருங்கள், மூங்கில் அறிவோம்.

வாயுக்கோளாறுகள் நீங்க...

மூங்கில் மரத்தின் இலைகளைக் கசாயமிட்டு சாப்பிட, வாயுக் கோளாறுகள், வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவை குணமாகும். மேலும் ரத்தத்தைத் தூய்மை செய்யும். வயிற்றுப்பூச்சிகள் ஒழியும். மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாயின்போது உண்டாகும். வயிற்றுவலிக்கு மூங்கில் கசாயம் ஒரு மாமருந் தாய் செயல்படுகின்றது.

ரத்தவாந்தி குணமடைய...

மூங்கிலின் துளிர் இலைகளை 10 கிராம் அளவில் எடுத்து, அதை நசித்துச் சாறெடுத்துச் சாப்பிட, வாந்தி மற்றும் ரத்த வாந்தி உடனே நிற்கும். மேலும் உடம்பில் பிற நோய்களின் வெளிப்பாடாய்க் காட்டும் வீக்கம் மூங்கில் துளிர் இலைச்சாறால் குணமடையும்.

மூட்டுவலி குணமடைய...

மூங்கில் இலைச் சாற்றை மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி குணமாகும். மேலும் மூங்கில் இலைக் கசாயத்தைச் சாப்பிட்டு வந்தாலும் மூட்டுவலி, இடுப்புவலி, நரம்பு வலி போன்ற குறைபாடுகள் தீரும்.

புண்கள் ஆற...

மூங்கிலின் இளமுளைகளை நசுக்கிப் பிழிந்து சாறெடுத்து, அதை அழுகல் புண்களுக்குப் பூசி, பின்னர் அந்தக் சக்கையை புண்களுக்கு வைத்துக் கட்ட புண்ணில் உள்ள கிருமிகள் மடியும். புண்களும் வெகு சீக்கிரம் ஆறும்.

வெள்ளைப்படுதல் குணமடைய...

மூங்கில் இளங்குருத்துகளை ஒரு பங்குக்கு இருபது பங்கு நீர் சேர்த்து கசாயமிட்டு அருந்தி வந்தால், முறையற்ற மாதவிடாய் சீராகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் அதிசயமாய் குணமாகும். காய்ச்சல் கண்டிருக்கும் போது மூங்கில் குடிநீர் சாப்பிட, விஷக்காய்ச்சலும் விரைவில் குணமாகும்.

வெண்புள்ளி நோய் மறைய...

நமது சருமப் பகுதியில் மெலனோசைட் என்ற நிறமிகள் செறிந்து காணப்படுகின்றன. இவை மெலனின் என்ற நிறமிகளாகச் செயல்பட்டு, நமது சருமத்தை ஒரே நிறத்தில் பராமரித்து வரு கின்றன. நமது சருமத்தில் மெலனின் நிறமிகள் குறையும்போதுதான், சிறுபுள்ளிகள்போல் ஆரம்பித்து, உடம்பெல்லாம் வெள்ளை பரவு வதுபோல் பரவுதலே வெண்புள்ளி நோயாகும். வெண்புள்ளி நோய் ஒரு தொற்றுநோயோ அல்லது உயிர்க்கொல்லி நோயோ அல்ல. நமது உடம்பின் இயல்பான நிறத் தைக் கெடுக்கும் நோய்; அவ்வளவு தான்.

மற்றவர் பார்வைக்கு நாம் வித்தியாசமாய் படும்பொழுது நமக்குள்ளே ஒரு குற்ற உணர்வு தோன்றி நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். இந்த வெண்புள்ளி நோயை சித்தர்கள் அருளிய மருந்து களாலேயே முற்றிலும் குணப்படுத்த இயலும். சித்தர்களின் ஆசியுடன் சொல்லப்படும் இம்மருந்தினை பத்திரமாய்க் குறிப்பெடுத்து, மிகப்பக்குவமாய் மருந்து செய்து சாப்பிட்டு வர வெண்புள்ளி நோய் முற்றிலுமாய் மறையும். இதோ அந்த மருந்து!

முதலில் அரை கிலோ மூங்கில் இலைகளை மூன்று லிட்டர் நீர் சேர்த்துக் கசாயமிடவும். பாதியாகச் சுண்டச் செய்து, அதில் அரை கிலோ வெந்தயத்தை ஊறப்போடவும். இரவில் வெந்தயத் தைத் துணியில் கட்டி வைத்து மறுநாள் பார்த் தால், வெந்தயம் ஓரளவு முளைப்பு கண்டிருக் கும். அந்த வெந்தயத்தின் எடைக்கு பாதி அளவு கீழாநெல்லி, கரிசாலை, சீந்தில், துத்தி ஆகிய வற்றைச் சேர்த்து விழுதாய் அரைக்கவும். பின்னர் மூன்று லிட்டர் பசும்பாலை கொதிக்க வைத்து, அதில் அரைத்த விழுதுகளைக் கொட்டி பதமுறக் காய்ச்சி வடிகட்டவும். வடிகட்டிய சாற்றுக்கு சம அளவு திரிபலா சூரணம் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் இருபங்கு தேன் சேர்த்து லேகியம் போல் செய்யவும். இந்த லேகியத்தை காலை- மாலை உணவுக்கு முன்பாக தொடர்ந்து ஆறு மாதங்களாவது சாப்பிட்டு வரவேண்டும். இதனால் வெண்புள்ளி நோய் படிப்படியாய் மறைய ஆரம்பிக்கும்.

குடற்புண் மறைய...

மூங்கில் கணுக்களில் விசேஷமாய் உற்பத்தி யாகும் ஒரு வகை உப்பு மூங்கில் உப்பாகும். மூங்கில் உப்பு பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மூங்கில் உப்பை தக்க முறையில் மருந்தாகப் பாவித்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண் மற்றும் பித்த நோய்கள், உஷ்ணநோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

சித்த மருத்துவர்கள் குடற்புண்ணை ஆற்று வதற்கு மூங்கில் உப்பு கலந்த மருந்துகளையே முறையாகத் தருவர். மேலும் இதய நோய்களுக்கும் மிக்க பலன் தரக்கூடியது.

மலச்சிக்கலை முழுமையாய்ப் போக்குகிறது. காயங்களை ஆற்றுகிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. கல்லீரல் சார்ந்த குறைபாடுகளையும் களைகிறது. மூங்கில் உப்பை அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தனித்துச் சாப்பிடலாம். அல்லது 100 கிராம் திரிபலா சூரணத்துடன் பத்து கிராம் மூங்கில் உப்பைக் கலந்து, தினசரி இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, மேற் கண்ட பிணிகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.

படை, சொறி, சிரங்கு மறைய...

மூங்கில் வேரைத் தூள் செய்து பசும்பாலில் குழைத்து, படை, சொறி, சிரங்குகளில் பூசிவர, அவை வெகு சீக்கிரத்தில் மறையும்.

உடலுக்கு வன்மை தரும் மூங்கிலரிசி

மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, யானையின் தோள்களை யொத்த அபார திடம் உண்டாகும். உடம்பு வஜ்ஜி ரம்போல் இறுகும். கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும். உடம்பை இரும்பாக்கும் உன்னதத்தைத் தன்னகத்தே கொண்டு நோய் தீர்க்கும். மூங்கிலரிசியை முறையாய் சாப்பிட்டு வளமுற வாழ வேண்டும் என்பதே சித்தர்களின் ஆசையாகும். சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பை பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும்.

மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிட லாம். கீழே வகைப்படுத்தும் பக்குவமுறையை அக்கறையாய் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.

(ஆன்மீக சிந்தனையில் அடியேன்  கணேசன் பாண்டிச்சேரி)

No comments:

Post a Comment