ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்!

ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்!
கணபதியே சரணம்!
கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயம். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  
எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு!
'முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு... இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!
வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை'' என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.  
'பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.
'சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.'' எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.
விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!
  - அ.சியாமளா கௌரி
படங்கள்: மு.குகன்
-Ganesan Pondicherry -   

சிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை!

சிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை!

மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கிறது பத்ரகாளியம்மன் திருக்கோயில். எலுமிச்சை விளக்கும் மாலையும் அங்கே அவ்வளவு பிரசித்தம். அதை விட அந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பாக அமைந்திருப்பது அந்தக் கோயிலின் சிற்ப வேலைபாடுகள்.
கற்தூண்களில் காணப்படும் வேலைபாடுகள் அதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. அதற்கு மேலே அங்கே கருங்கல்லினால் செய்யப்பட்ட சிங்கத்தின் சிலை அங்கு வரும் பக்தர்கள் பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அந்த சிங்கத்தின் வாயில் ஒரு எலுமிச்சை என்று சொல்லப்படும் பந்து போன்ற அமைப்பு வாயின் உள்ளே சுற்றிக் கொண்டே இருக்கிறது.இத்தனை அதிசயம் நிறைந்த அந்த கோயிலை தரிசிக்க இப்போதே ஆவலாய் இருக்கிறதல்லவா..!


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள "கோட்டைமேடு பத்ரகாளி" திருக்கோயில். இந்த பத்ரகாளிக்கு எலுமிச்சை என்றால் அவ்வளவு பிரியம். எலுமிச்சை மாலை அல்லது எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து விடுவாள்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர், கடையேழு வள்ளல்களின் ஆட்சி பகுதியான இங்கு 18 பட்டி முழுவதும் எங்கு பார்த்தாலும் கோட்டைகளாக இருந்துள்ளது. மேலும் பரந்து விரிந்த நிலையில் ஒரு பெரிய ஏரி இந்த பகுதியில் இருந்துள்ளது. ஆனால் சரியான மழை இல்லாமல் ஏரியானது வறண்டு, விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்துள்ளனர்.

“ஒரு நாள் மன்னன் பாரியின் கனவில் தோன்றி, நான் பத்ரகாளி என்றும், நான் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை காக்க ஏரியின் வடது கரையில் மேடான பாறையின் மேல் குடிகொண்டுள்ளதாகவும், இனி ஏரியில் எப்போதும் தண்ணீர் வற்றாது எனவும் கூறி, எனக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை கட்டி உடனடியாக குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாள், காளி”. அகிலத்தையும் காக்கும் நான் மேடான பாறையில் இருப்பேன், இதனால் என்னை மீறி எந்த தவறும் நடக்காது எனவும், நான் தினமும் ஏரியில் குளிக்க வேண்டும் எனவும், அதனால் என்னை தினமும் ஏரிக்கு அழைத்து சென்று குளிப்பாட்ட வேண்டும் எனவும் கூறியிருக்கிறாள்.


‘மன்னன் உடனடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்ட போது எலுமிச்சை பழம் இருந்துள்ளதை கண்டு, கனவில் வந்தது காளிதான் என்று மக்களிடம் கூறி, உடனடியாக பாறையின் மீது ஒரு ஆலயத்தை கட்டியுள்ளார்’. இதனால் கருவறையானது பாறை மீது காளி அமர்ந்தவாறு மேடான பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இந்த பகுதியில் பலவன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி, தொந்தரவு செய்து வந்துள்ளான். மக்கள் பத்ரகாளியிடம் முறையிட்டு அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டியுள்ளனர். “இதனால் அரக்கனை, பல்வேறு ஆயுதங்களை கொண்டு வதம் செய்து அழித்ததால் பத்ரகாளி எட்டு கரங்களுடன், அரக்கனை உக்கிரமாக வதம் செய்யும் காட்சியுடன், கருவறையில் வீற்றிருக்கிறாள்”.

இதனால் பத்ரகாளியின் கோபத்தை தணிக்க கோவில் முழுக்க கருங்கற்கள் மற்றும் பளிங்குகற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலயம் எப்போதும் குளுமையாக இருக்கிறது. “எனவே கோட்டை போன்ற வடிவமைப்புடன் மேட்டில் குடிகொண்டுள்ளதால், கோட்டை மேடு பத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறாள்”.

காளியின் காவலான சிங்கமானது, அடிக்கடி வனவிலங்குகளையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனை தடுக்க மக்கள் வேண்டியதை ஏற்று, சிங்கத்தின் சீற்றத்தை குறைக்க அதன் வாயில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்ததாகவும், அதனை குறிக்கும் விதமாக ஆலயத்தில் பத்ரகாளியை பார்த்தவாறு பெரிய சிங்கமானது காட்சியளிக்கிறது. “சிங்கத்தின் வாயில் பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும் எலுமிச்சை வடிவில், கல் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது”. இந்த சிலையானது மிகவும் அபூர்வமானது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சிலையை காண முடியாது. இது அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக விளங்குவதாக காட்சியளிக்கிறது.

மேலும் இந்த சிங்கத்தின் மீது தினமும் இரவு வேளையில் ஊரை காக்க சலங்கை அணிந்து வலம் வந்ததாகவும், அதனை மக்கள் பார்த்துள்ளதாகவும் பரவசமாக கூறுகின்றனர். இது தவிர காளியின் இரு புறத்திலும், பூதகணங்கள் எனப்படும் இரு காவல் தெய்வங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கப்பட்ட சிலைகளாகும். யானைகள் அடிக்கடி காளியை வணங்கியதாகவும், அதனை குறிக்கும் வகையில் ஆலயத்தின் இருபுறங்களிலும் யானை சிலைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பத்ரகாளிக்கு எலுமிச்சை பழத்தில்விளக்கேற்றி வழிபட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும். மேலும் திருமண தடை நீங்கும், தொழில் வளம் பெருகும் மற்றும் நோய் நொடிகள் உடனடியாக தீரும். இந்த கோவிலில் பூ போட்டு வாக்கு கேற்கும் நிகழ்ச்சியானது மிகவும் விஷேசமாகும். பத்ரகாளி சரியான வாக்கை அருள்வாள் என்பது மக்களின் உண்மையான நம்பிக்கை.

கு.ஆனந்தராஜ் 
படங்கள்: - த.ஸ்ரீநிவாசன்
http://aalayamarivom.blogspot.in/2014/11/blog-post.html

சதுர்காலபைரவர்

சதுர்காலபைரவர்


      தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில்,கும்பகோணத்திற்கு கிழக்கே 6 km தொலைவில்திருவீசநல்லூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கு சௌந்திர நாயகி உடனுறை சிவயோகி நாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில்,திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சதுர்காலபைரவர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு மக்களின் ஆயுட்காலம்120 ஆண்டுகளாக இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்வை நான்காகப் பிரித்திருந்தனர். இதன் அடிப்படையில் இங்கு ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒரு பைரவர் என்ற விதத்தில் நான்கு பைரவர்கள் இங்கே உள்ளனர். அவை முறையேமுதல் கட்டத்தில் முதல் 30 ஆண்டுகள் ஞானம் பெரும் நோக்கத்தில் ஞான பைரவரை வணங்க வேண்டும். அடுத்த இரண்டாம்கட்டத்தில் 31 முதல்60 வயது வரை மகாலட்சுமி சன்னதியின் எதிரே திருவாட்சியுடன் காட்சி தரும்ஸ்வர்ணஆகர்ஷண பைரவரை மூன்றாம் கட்டத்தில் 61 முதல் 90வயது வரை உள்ள காலத்திற்கு உன்மத்த பைரவரை வணங்கவேண்டும்.

            நான்காம் கட்டத்தில் 91 முதல் 120 வரை உள்ள காலத்திற்கு யோக பைரவரை வணங்க வேண்டும். இவ்வாறாக இத்திருக்கோயிலில் ஞானபைரவர்ஸ்வர்ணஆகர்ஷண பைரவர்,உன்மத்த பைரவர்யோக பைரவர் என நான்கு வடிவங்களில் பைரவர் அமைந்துள்ளது வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.

        மனிதனின் ஆயுள் காலத்தைப் பிரித்து அவன் எப்படி வாழ வேண்டும் அந்தந்த வயதில் என்னென்ன செய்யவேண்டும் என்பன போன்ற விளக்கங்களை உலகிற்கு எடுத்துக்காட்டியதோடு மட்டும் அல்லாமல் வாழ்ந்தும் காட்டி  திருக்கோயில்களை தன் வாழ்வின் ஒரு பகுதியாக அமைத்து வாழ்ந்தது தமிழனின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் செயல்.எனவே. அந்த நல்ல மனிதர்களை நினைத்தது வணங்க வேண்டும்.

அஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்


      அஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்..  ஆறகளூர்


ஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றது.   இந்த தலம் சேலம் மாவட்டத்திற்கும் அருகில் உள்ள தலைவாசலில்  இருந்து  6kmலில்  தான் அமைத்துள்ளது ஆறகளூர் என்ற ஆன்மிக அற்புத சிறப்பு மிக்கதிருகோயில் ,வேறு எங்கும் இல்லாத வகையில் அஷ்ட்ட பைரவர்களும் இந்த கோவிலில் அமைந்திருப்பது சிறப்பு.தமிழ்நாட்டில் சைவத்தில் தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் புத்துயிர்பெற்று  உள்ளது .இதில் மிகவும் சிறப்புடையது ஒரே கோவிலில் 8 பைரவரை வழிபடுவது 


    
      மேலும் சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது.
    
மேலும் பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.
        
         இங்கு, மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியில், விழா நடந்து வருகிறது. 
 காமநாதீஸ்வரர் கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இது. பாடல்பெற்ற திருத்தலமான இது, முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சோழ அரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர் வானவராயன் என்பவர் இந்த ஊரை ஆண்டுள்ளார்.
 கோவிலுக்குள் சென்றதும் முதலில்  முழுமுதல் கடவுள் கணபதியை  வணங்கி பிறகு கொடிமரம் ,நந்தி தரிசனம் முடித்து எல்லாம் வல்ல எம்பெருமான் சுயம்பு மூர்த்தி அருள்மிகு காமநாதீஸ்வரரைவணங்கலாம் .மேலும் அய்யனின் சிறப்பு இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை "காயநிர்மாலேஸ்வரர்' என்கின்றனர். "காயம்' என்றால் உடல், "நிர்மலம்' என்றால் பரிசுத்தம் என்று பொருள். 

 இனி அஷ்ட பைரவர்களை பார்ப்போம் 


 1. ஸ்ரீ அசிதாங்க பைரவர்
முதல்  பைரவர் மூலவருக்கு இடது பக்கத்தில் எழுந்துள்ளார் 






குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி
ஓம் ஞான தேவாய வித்மஹே   வித்யா ராஜாய தீமஹி  தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்,
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத் என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம் 




2, ஸ்ரீ ருரு பைரவர் 
         இரண்டாவது  பைரவர் வலது பக்கப்பிரகாரத்தில்  அமைந்துள்ளது 







சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்,மாஹேஸ்வரி
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்
ஓம் வருஷத் வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி   தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத    
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்


 3. ஸ்ரீ சண்ட பைரவர் 
    மூன்றாவது  பைரவர் ஆலயத்தை வலம் வரும்போது  நவக்கிரகத்தின் பின்புறம்  அமைத்துள்ளார்கள் 





செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே, மஹாவீராய தீமஹி, தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே, வஜ்ர ஹஸ்தாயை தீமஹி, தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்
 என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்





4 .ஸ்ரீ குரோதான பைரவர் 
நான்காவது பைரவர்  நுழைவாயில் இடதுபுறத்தில் அமைந்துள்ளது 









சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி
ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே,  லட்சுமி தராய தீமஹி, தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி, தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்.


  5 .ஸ்ரீ பீஷண பைரவர்

இந்த  5வது பைரவர் கோவிலுக்கு வெளியே மதில் சுவற்றுக்குள் வலது பக்கத்தில்  8 தூண்கள் மேல் அமைந்த திறந்த வெளி  மணடபத்தின் நடுவில் அமைந்துள்ளது .மேலும் இந்த 8 தூண்களும் 8பைரவர்களை குறிப்பதாகவும்  இங்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் 8 பைரவர்களை வ்ணங்கியதற்கு சமம்  




கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே, ஸர்வானுக்ராய தீமஹி,  தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி, தந்நோ; காளி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்


 6 ஸ்ரீ கபால பைரவர் 


இந்த 6வது பைரவர் கோபுரத்தில்  குடிகொண்டுள்ளார். இவரை நாம் நேரில் தரிசிக்க முடியாது...









சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்
ஓம் கால தண்டாய வித்மஹே, வஜ்ர வீராய தீமஹி, தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்
ஒம் கஜத்வஜாய வித்மஹே, வஜ்ர ஹஸ்தாய தீமஹி,தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்.




7 ஸ்ரீ உன்மந்த பைரவர் 



புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே,வராஹி மனோகராய தீமஹி, தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே, தண்ட ஹஸ்தாயை தீமஹி, தந்நோ: வராஹி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்   


 8,ஸ்ரீ காலசம்ஹார பைரவர்    

ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ
ஓம்மங்களேஷாயவித்மஹேசண்டிகாப்ரியாயதீமஹிதந்நோ, ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்




ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே, மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்     
 மேலும் இந்த ஆலயத்தில் மிக அற்புதமான்  சிற்ப்ப வேலைப் பாடுகள் கொண்ட சிலைகள் உள்ளன.
















ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட  வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியன்  மயில்மேல் அமர்ந்த கோலம்  கண்கொள்லாகாட்சியாக உள்ளது 







   மூலவர்  காமநாதீஸ்வரர் 


அம்மன் பெரியநாயகி

இதில் கண்டவற்றில் மாறறம் தேவையாயின் சுட்டிக் காட்டி என்னை நன்றாக படைக்க சுட்டிக் காட்டவும் 
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய  நமஹா 
ஓம் ஸ்ரீ சுந்தர மகாலிங்கேஷ்வரா நமஹா 
ஆன்மீகச்சிந்தனையில்  அடியேன் சம்ப. கணேசன் பாண்டிச்சேரி 

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்).

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்).

அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம்
இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது. ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இந்த ஈஸ்வரன், நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.



காஞ்சிபுரத்தைப் போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது. வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார்.


பிரார்த்தனை இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது.

 அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள்புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். 

நேர்த்திக்கடன்: 
அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்)புடவை சாத்துதல், பால் அபிசேகம்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். 

தலபெருமை: 
ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரர் : இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். 

அன்னையின் தவக்கோலம் :


 ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது கறிப்பித்தக்கது. 

நான்கு அம்பாள் தரிசனம் : 
மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம். 

"ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சுட்டான்'னு சொல்வது ஏன்? : குழந்தைகள் அடம்பிடித்து எதையாவது வாங்கி விட்டாலும் சரி.., அவர்களே தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும் சரி..."ஒற்றைக்காலில் நின்று சாதித்து விட்டான்' என்று சொல்வது வழக்கம். இந்த பேச்சு வழக்கு காமாட்சியம்மனை மையப்படுத்தியே வந்தது. அம்பாளை, சிவன் பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்து, அவரது தரிசனம் பெற்றாள். இறைவனை கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என சிலர் விதண்டாவாதம் பேசுவர். இறைதரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஈசனின் மனைவியே அவரைப் பார்க்க ஒற்றைக்காலில் நிற்க வேண்டி இருக்கிறது என்றால், சாதாரண மானிடர்களான நமக்கு எவ்வளவோ பக்குவம் வேண்டும்!

 பக்தனுக்கே முதலிடம்... : 

திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார். அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றி தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள். அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன். 

கணையாழியுடன் பெருமாள்: 

சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள். 

நிறைமணி தரிசனம்: 
பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர். 

புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

முத்தேவியருடன் தங்கத்தேர்: தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது. இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னதி உள்ளது. 

தல வரலாறு: கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது. அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்கு பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும் போது ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது. 

சித்திரைத் திருவிழா -10 நாட்கள் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர். இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி, பொங்கல் நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிப்பது சிறப்பு.-Ganesan Pondicherry-