அஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்.. ஆறகளூர்


      அஷ்ட்ட பைரவர் திருகோயில் தரிசனம்..  ஆறகளூர்


ஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றது.   இந்த தலம் சேலம் மாவட்டத்திற்கும் அருகில் உள்ள தலைவாசலில்  இருந்து  6kmலில்  தான் அமைத்துள்ளது ஆறகளூர் என்ற ஆன்மிக அற்புத சிறப்பு மிக்கதிருகோயில் ,வேறு எங்கும் இல்லாத வகையில் அஷ்ட்ட பைரவர்களும் இந்த கோவிலில் அமைந்திருப்பது சிறப்பு.தமிழ்நாட்டில் சைவத்தில் தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் புத்துயிர்பெற்று  உள்ளது .இதில் மிகவும் சிறப்புடையது ஒரே கோவிலில் 8 பைரவரை வழிபடுவது 


    
      மேலும் சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது.
    
மேலும் பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.
        
         இங்கு, மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியில், விழா நடந்து வருகிறது. 
 காமநாதீஸ்வரர் கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இது. பாடல்பெற்ற திருத்தலமான இது, முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சோழ அரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர் வானவராயன் என்பவர் இந்த ஊரை ஆண்டுள்ளார்.
 கோவிலுக்குள் சென்றதும் முதலில்  முழுமுதல் கடவுள் கணபதியை  வணங்கி பிறகு கொடிமரம் ,நந்தி தரிசனம் முடித்து எல்லாம் வல்ல எம்பெருமான் சுயம்பு மூர்த்தி அருள்மிகு காமநாதீஸ்வரரைவணங்கலாம் .மேலும் அய்யனின் சிறப்பு இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை "காயநிர்மாலேஸ்வரர்' என்கின்றனர். "காயம்' என்றால் உடல், "நிர்மலம்' என்றால் பரிசுத்தம் என்று பொருள். 

 இனி அஷ்ட பைரவர்களை பார்ப்போம் 


 1. ஸ்ரீ அசிதாங்க பைரவர்
முதல்  பைரவர் மூலவருக்கு இடது பக்கத்தில் எழுந்துள்ளார் 






குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி
ஓம் ஞான தேவாய வித்மஹே   வித்யா ராஜாய தீமஹி  தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்,
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத் என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம் 




2, ஸ்ரீ ருரு பைரவர் 
         இரண்டாவது  பைரவர் வலது பக்கப்பிரகாரத்தில்  அமைந்துள்ளது 







சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்,மாஹேஸ்வரி
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்
ஓம் வருஷத் வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி   தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத    
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்


 3. ஸ்ரீ சண்ட பைரவர் 
    மூன்றாவது  பைரவர் ஆலயத்தை வலம் வரும்போது  நவக்கிரகத்தின் பின்புறம்  அமைத்துள்ளார்கள் 





செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே, மஹாவீராய தீமஹி, தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே, வஜ்ர ஹஸ்தாயை தீமஹி, தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்
 என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்





4 .ஸ்ரீ குரோதான பைரவர் 
நான்காவது பைரவர்  நுழைவாயில் இடதுபுறத்தில் அமைந்துள்ளது 









சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி
ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே,  லட்சுமி தராய தீமஹி, தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி, தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்.


  5 .ஸ்ரீ பீஷண பைரவர்

இந்த  5வது பைரவர் கோவிலுக்கு வெளியே மதில் சுவற்றுக்குள் வலது பக்கத்தில்  8 தூண்கள் மேல் அமைந்த திறந்த வெளி  மணடபத்தின் நடுவில் அமைந்துள்ளது .மேலும் இந்த 8 தூண்களும் 8பைரவர்களை குறிப்பதாகவும்  இங்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் 8 பைரவர்களை வ்ணங்கியதற்கு சமம்  




கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே, ஸர்வானுக்ராய தீமஹி,  தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி, தந்நோ; காளி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்


 6 ஸ்ரீ கபால பைரவர் 


இந்த 6வது பைரவர் கோபுரத்தில்  குடிகொண்டுள்ளார். இவரை நாம் நேரில் தரிசிக்க முடியாது...









சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்
ஓம் கால தண்டாய வித்மஹே, வஜ்ர வீராய தீமஹி, தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்
ஒம் கஜத்வஜாய வித்மஹே, வஜ்ர ஹஸ்தாய தீமஹி,தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்.




7 ஸ்ரீ உன்மந்த பைரவர் 



புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே,வராஹி மனோகராய தீமஹி, தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே, தண்ட ஹஸ்தாயை தீமஹி, தந்நோ: வராஹி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்   


 8,ஸ்ரீ காலசம்ஹார பைரவர்    

ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ
ஓம்மங்களேஷாயவித்மஹேசண்டிகாப்ரியாயதீமஹிதந்நோ, ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்




ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே, மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்     
 மேலும் இந்த ஆலயத்தில் மிக அற்புதமான்  சிற்ப்ப வேலைப் பாடுகள் கொண்ட சிலைகள் உள்ளன.
















ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட  வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியன்  மயில்மேல் அமர்ந்த கோலம்  கண்கொள்லாகாட்சியாக உள்ளது 







   மூலவர்  காமநாதீஸ்வரர் 


அம்மன் பெரியநாயகி

இதில் கண்டவற்றில் மாறறம் தேவையாயின் சுட்டிக் காட்டி என்னை நன்றாக படைக்க சுட்டிக் காட்டவும் 
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய  நமஹா 
ஓம் ஸ்ரீ சுந்தர மகாலிங்கேஷ்வரா நமஹா 
ஆன்மீகச்சிந்தனையில்  அடியேன் சம்ப. கணேசன் பாண்டிச்சேரி 

1 comment:

  1. அருமையான தகவல். மிக்க நன்றி

    ReplyDelete