அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்
<><><><><><><><><><><><><><><><><><><><>

ஆசை ஆசையாய் காதலித்து கை பிடித்த கணவனை சில பெண்கள் மாயா சதி வலையில் விழவைத்து கணவன் மனைவிகளை பிரித்துவிடுவர் ,தம்பதிகளை பிரிக்க எத்தகைய சதி செய்தாலும் அவர்களின் செயல்கள் யாவற்றையும் சக்தி வாய்ந்த இடமுண்டு 

தம்பதிகள் இணைபிரியாமல் ஒன்றாய் வாழ்வதற்கும் நன்றாய் வாழ்வதற்கும்
அந்த வாஸ்து சக்தி நிறைந்த இடம் ஸ்ரீ வரகூர் வெங்கடேசபெருமாள் கோவில்
இங்கு பெருமாள் யாராலும் பிரிக்கமுடியாதபடி ஆதரவாக பிராட்டியாரை அணைத்தபடி உள்ளார் பிராட்டியும் தன்னை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாதபடி அன்பொழுக தழுவியுள்ளார் 


இத்தலத்துக்கு பெண்கள் வந்து ஒன்பது கஜசேலையை பிராட்டிக்கு சாற்றி 108 மஞ்சள் தானமாக அளித்தால் எந்த தீய சக்தியும் கணவன் மனைவியை பிரிக்க முடியாது 

இன்று வரகூர் என்று அறியப்படும் இந்த ஊரின் பழைய பெயர் பூபதிராஜபுரம் . குடமுருட்டியாறு காவிரியின் கிளை ஆறு. குடமுருட்டி ஆற்று கரையில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது .ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற மகான் கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற மகா காவியத்தை வரகூரில் தான் படைத்தார். 

ஆந்திரத்தை சேர்ந்த நாராயண தீர்த்தர் ஒரு நதியை கடக்கும் போது ஏற்பட்ட திடீர் வெளள் பெருக்கால் தெற்கு நோக்கி பயணம் செய்கிறார். குடமுருட்டி ஆற்றை கடக்கும் பொது கடும் வயிற்று வலியால் .அவதிபடுகிறார். அன்று கனவில் தோன்றிய கடவுள் ஒரு வெள்ளை வரஹத்தை (பன்றி ) பின் பற்றி செல்ல கட்டளையிடுகிறார்.அந்த வராகம் பூபதிராஜபுரத்தில் உள்ள பெருமாள் கோவில் உட்புறம் சென்று மறைந்து விடுகிறது.

அன்று முதல் ஊர் பெயர் வராஹபுரி என்று மாறி பின்பு மறுகி வரகூர் என்று இன்று அறியபடுகிறது என்பது இந்த ஊரின் தல வரலாறு .தன பிணி நீங்கியதை உணர்ந்த நாராயணர் வரகூரில் தங்கி மகாபாரதத்தில் உள்ள சாரத்தை உள்ளடக்கி கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற காவியத்தை வடமொழியில் படைக்கிறார். நாராயணர் வரகூரில் தங்கி தான் இயற்றிய பாடல்களை பாடிய பொழுது திரைக்கு பின் பெருமாள் நடனமாடியதாகவும் ,சலங்கை சத்தம் கேட்டதாகவும் சொல்லபடுகிறது . 

இன்னொரு சிறப்பு அனுமார் தாளம் போட்டதாவகவும் சொல்லபடுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர்.இந்த கோவிலில் கிருஷ்ணா ஜெயந்தி பெரிய திருவிழாவாக கொண்டாடபடுகி.றது வரகூர் கோவிலின் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம் . வரகூர் பெருமாளின் பெயர் லக்ஷ்மிநாராயணர் .லக்ஷ்மி பெருமாளின் இடது தொடையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். குழந்தை வரம் வேண்டுவோர் பெருமாள் காலடியில் வைத்து வேண்டிய கொலுசை அணிவது இங்கு வாடிக்கை. 

இன்னொரு சிறப்பு பெருமாள் கோவிலின் மிக அருகிலேயே சிவன் கோவிலும் உள்ளது . பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவிலில் ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் 

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள்

திருக்கோயில்நடுக்காவேரி வரகூர் 613 101, தஞ்சை மாவட்டம்+91 4362 280856 94436 74911 94428 52145


தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் நடுக்காவேரியைத் தாண்டியவுடன் 
கருப்பூருக்கு அடுத்து உள்ள தலம். பூதலூர் ரயில் நிலையத்திலிருக்து 7 
கி.மீ. இருப்பினும் சாலை வழி வசதிகள் குறைவாக உள்ளதால் பூதலூரிலிருந்து 
வருவதைக் காட்டிலும் தஞ்சையிலிருந்து வரலாம். தஞ்சையிலிருந்து 25 கி.மீ. 
திருவாற்றையிலிருந்து 15 கி.மீ. செந்தலைக்குத் தெற்கே உள்ளது. தஞ்சை பஸ் 
நிலையத்திலிருந்து கண்டியூர், நடுக்காவேரி, இந்தலூர், இளங்காடு, பூண்டி 
மாதா கோவில் செல்லும் பேருந்துகள் வரகூர் கிளைப்பாதை வழியாக செல்கின்றன. 
காலை 4 மணி முதல் இரவு 1 மணி வரை பேருந்துகள் உண்டு.ஸ்ரீ
லட்சுமி நாராயணர் ஸ்ரீ மகாலட்சுமித் தாயார் வீற்றிருந்த கோலம் கிழக்கு 
திருமுகம் ஸ்ரீ வெங்கடேசர் பூமிதேவி, ஸ்ரீதேவித் தாயார்
பிரதி வருடம் காயத்ரி ஜபம் தொடங்கி ஆவணி மாதத்தில் 10 நாட்கள் உறியடி 
உற்சவம் வழுக்குமரப் போட்டியிடன் நடைபெற்று கோகுலாஷ்டமியுடன் இணைத்து 
விமரிசையாக நடைபெறுகிறது. ருக்மணி கல்யாணமும் ஹனுமத் ஜெயந்தியுடன் நிறைவு 
பெறுகிறது.

திறக்கும் நேரம்: 6.00 முதல் 12.15,மாலை 5.00 முதல் 08.15 வரை
.

ஆன்மீகச்சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி

2 comments: