அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில்,திண்டிவனம்,விழுப்புரம்

அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில்
[Image1]
மூலவர்:லட்சுமி நரசிங்கப்பெருமாள்
உற்சவர்:வரதராஜப்பெருமாள்
அம்மன்/தாயார்:மகாலட்சுமி
தல விருட்சம்:மருதமரம், நெல்லி
தீர்த்தம்:ராய தீர்த்தம்
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திண்டிவனம்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
 திருவிழா:
வைகாசியில் பத்து நாள் பிரமோற்ஸவம், பவுர்ணமியில் கருட சேவை. திருவோணத்தன்று தீர்த்தவாரி.
 தல சிறப்பு:
இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில், திண்டிவனம்-604 001 விழுப்புரம் மாவட்டம்.
போன்:
+91- 4147-225 077, 99432 40662.
 பொது தகவல்:
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். பள்ளி கொண்ட ரங்கநாதர், கோதண்ட ராமர், வேணு கோபால், ஆண்டாள், சக்கரத் தாழ்வார், ஆஞ்சநேயர், ஆகியோருக்கும் சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
கடன் தொல்லைகள் நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், செவ்வாய் தோஷம் விலகவும், திருமணத்தடைகள் நீங்கவும் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்களும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்குள்ள நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இங்கு பரிகார பூஜை செய்தும், திருமஞ்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 தலபெருமை:
சங்கு சக்கர ஆஞ்சநேயர்: முன்காலத்தில் திண்டிவனம் புளியமரக்காடாக இருந்தது. வட மொழியில் "திந்திருணி' என்பது புளியமரத்தை குறிக்கும். "திந்திருணி வனம்' என்பது மருவியே திண்டிவனம் ஆனது. திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர்.அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், அரக்கர் களை அழித்து முனிவர்களை காப்பதற்காக தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதன்படிஅனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின்வேள்வி தடையின்றி நடைபெற அருள்பாலித் தார்.இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது மகாலட்சுமியை அமரச் செய்துள்ளார். தாயார் கனகவல்லி தனி சன்னதியில் உள்ளார். உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.
  தல வரலாறு:
இரணியன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன். அசுரகுலத்தில் பிறந்தாலும், நாõராயணனின் பக்தனாக இருந்தான். அந்நாட்டில், இரணியனையே மக்கள் கடவுளாக வணங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. அதை மகனே மீறியதால், அவனைத் துன்பம் செய்தான் இரணியன். நாராயண பக்தி செய்ததற்காக, பெற்ற பிள்ளையையே கொடுமை செய்ததைக் கண்ட திருமால் அவனை அழிப்பதற்காக மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு, நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். "நரன்' என்றால் "மனிதன்'. "சிம்மம்' என்றால் சிங்கம். நரசிம்மரின் கோபத் தினால் உலகம்நடுங்கியது. இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும்படி மகாலட் சுமியை வேண்டினார். தாயார் பெருமாளிடம் சினம் தணியும் வகையில் ஆசுவாசப் படுத்தினாள். இதன் அடிப்படையில் லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது. இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. லட்சுமிக்கு இக்கோயிலில் முக்கியத்துவம் என்பதால் "நரசிம்ம லட்சுமி' கோயில் என்று இதற்கு பெயர் வந்து விட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.

11. அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்,
திண்டிவனம்
அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்
மூலவர்:லட்சுமி நரசிங்கப்பெருமாள்
அம்மன்/தாயார்:மகாலட்சுமி
இருப்பிடம்:விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 40 கி.மீ. தூரத்தில் திண்டிவனம் உள்ளது. ஊரின் நடுவில் கோயில் உள்ளது.
போன்:+91- 4147-225 077, 99432 40662.
பிரார்த்தனை:கடன் தொல்லைகள் நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், செவ்வாய் தோஷம் விலகவும், திருமணத்தடைகள் நீங்கவும் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்களும், ராகு திசை ...
சிறப்பு:இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. ...

அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்,திருஇடையாறு, திருவிடையாறு,டி. இடையாறு,விழுப்புரம்

  English
அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்:மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி
 தல விருட்சம்:மருதமரம்
 தீர்த்தம்:சிற்றிடை தீர்த்தம். இது அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது.
 ஆகமம்/பூஜை:-
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:திருஇடையாறு, திருவிடையாறு
 ஊர்:டி. இடையாறு
 மாவட்டம்:விழுப்புரம்
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 சுந்தரர், திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் பாசனூர் பரமேட்டி பவித்திரபாவ நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையாறு இடைமருதே.சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.


 
   
 திருவிழா:
   
 தைமாதம் ஆற்றுத் திருவிழா இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகும். 
   
 தல சிறப்பு:
   
 இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 224 வது தேவாரத்தலம் ஆகும். 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)திருக்கோயில், டி. இடையாறு-607 209, திருக்கோயிலூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம். 
   
போன்:
   
 +91 4146 216 045, 206 515, 94424 23919, 98847 77078 
   
 பொது தகவல்:
   
 அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
 
   
 
பிரார்த்தனை
   
 நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை. 
   
நேர்த்திக்கடன்:
   
 சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். 
   
 தலபெருமை:
   
 பலாச்சுளை பாலகணபதி சில சிவாலயங்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன் தான் அருள்பாலிப்பார்.  ஆனால், இத்தலத்தில் சிவ, பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.

சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். 39 திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து இத்தகைய தலங்களுக்கு இணையானது "இடையாறு' என்று பாடியுள்ளார்.  திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தை பாடியுள்ளார்கள். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.

சந்தனாச்சாரியருள் மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலமும் இதுவே. இடையாறில் பிறந்த இவர் , பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும், கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். (கடந்தை என்பது பெண்ணாடத்தின் புராணபெயர்) "சுகம்' என்ற சொல்லுக்கு "கிளி' என்று பெயர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். இங்குள்ள சுப்பிரமணியரின் பெயர் கலியகராமப்பிள்ளையார் என்பதாகும்.

திருமணத்தடை நீக்கும் தலம்: சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்களுக்கு "கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு' என்பர்.  நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.
 
   
  தல வரலாறு:
   
 கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள தலமான திருமருதந்துறை என்ற இடையாற்றில் எம்மை பூஜித்து, மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். ஒட்டுக்கேட்ட முனிவருக்கே மானிடப்பிறவி என்றால், ஒட்டுக்கேட்கும் மானிடர்களுக்கு எத்தகைய பிறவி கிடைக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.  
 

10. அருள்மிகு மருந்தீசர் கோயில்,
டி. இடையாறு
அருள்மிகு மருந்தீசர் கோயில்
மூலவர்:மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)
அம்மன்/தாயார்:ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி
இருப்பிடம்:திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் பஸ்களில் சென்றால் எடையார் பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.
போன்:+91 4146 216 045, 206 515, 94424 23919, 98847 77078
பிரார்த்தனை:நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது ...
சிறப்பு:இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் ...