அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில்,கல்பட்டு,விழுப்புரம்







8. அருள்மிகு சனீஸ்வரர் கோயில்,
கல்பட்டு
அருள்மிகு சனீஸ்வரர் கோயில்
மூலவர்:சனீஸ்வரர்
இருப்பிடம்:விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் மாம்பழபட்டு என்ற கிராமத்தை அடையலாம். இங்கிருந்து இடதுபக்கம் பிரியும் ரோட்டில் ஒரு கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரத்தில் இருந்து கல்பட்டிற்கு தனியார் பஸ்களும், 6ஏ என்ற அரசு டவுன் பஸ்சும் செல்கிறது.
போன்:+91- 4146 - 264 366, 97868 65634 , 94451 14881
பிரார்த்தனை:சனிதோஷ நிவர்த்தி பெற இங்கு சென்று, பிரார்த்தனை செய்து ...
சிறப்பு:21 அடி உயரத்தில் நின்ற நிலையில் திருவிழிகள் கருணைப் பார்வை பார்க்க, கருப்பும், நீலமும் கலந்த உடையணிந்து காட்சி தரும் சனீஸ்வரர், இடக்காலை தரையில் வைத்து, வலக்காலை பிரம்மாண்டமான ...
அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில்
[Image1]

மூலவர்:சனீஸ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:-
தீர்த்தம்:-
ஆகமம்/பூஜை:-
பழமை:500 வருடங்களுக்குள்
புராண பெயர்:-
ஊர்:கல்பட்டு
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
 திருவிழா:
சனிப்பெயர்ச்சி
 தல சிறப்பு:
21 அடி உயரத்தில் நின்ற நிலையில் திருவிழிகள் கருணைப் பார்வை பார்க்க, கருப்பும், நீலமும் கலந்த உடையணிந்து காட்சி தரும் சனீஸ்வரர், இடக்காலை தரையில் வைத்து, வலக்காலை பிரம்மாண்டமான காக வாகனத்தின் மீது ஊன்றி காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சனீஸ்வரர் கோயில், கல்பட்டு - 605 302 விழுப்புரம் மாவட்டம்.
போன்:
+91- 4146 - 264 366, 97868 65634 , 94451 14881
 பொது தகவல்:
சனீஸ்வரர் வழிபாடு பெருகி வருகிறது. அவர் பயமுறுத்தும் கடவுள் அல்ல. நியாயஸ்தர்; தவறு செய்வோரை மட்டுமே தண்டிப்பார். அவருக்கு சூடம் ஏற்ற வேண்டாம், எள்ளையும், எண்ணெயையும் ஊற்றி காக்கா மீதிருக்கும் அவரையே காக்கா' பிடிக்க முயல வேண்டாம். அர்ச்சனை செய்வதன் மூலம் உங்கள் குறையைச் சொல்ல வேண்டாம். உண்டியல் போட்டு அவரைச் சரிக்கட்ட முயல வேண்டாம். உங்கள் குறையை நீங்களே அவரிடம் சொல்லுங்கள். அவர் குறை தீர்ப்பார்," என்ற அடிப்படையில் ஒரு அமைதியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இத்தலம். வெறும் சனீஸ்வரர் மட்டுமல்ல; உச்சிஷ்ட கணபதி, 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர் (புவனேஸ்வரர்), புவனேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர், பஞ்சமுக ஆஞ்சநேயர், 8 அடி உயர தண்டாயுதபாணி, 18 அடி உயர அஷ்டாதசபுஜ துர்க்கை ஆகியோருக்கும் தனித்தனி விமானங்களுடன் சன்னதிகள் பிரம்மாண்டாமாக அமைக்கப்பட்டுவருகிறது. சிலைகள் அனைத்தும் பிரம்மாண்டமாக கலை நுட்பத்துடன் விளங்குகிறது.
பிரார்த்தனை
சனிதோஷ நிவர்த்தி பெற இங்கு சென்று, பிரார்த்தனை செய்து வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
சனிக்கிழமை தோறும் எள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபடலாம்.
 தலபெருமை:
பிரார்த்தனை ஸ்தலம்: பிரும்மானந்த சுவாமியால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். சனீஸ்வரன் சன்னதி முன்பு அமர்ந்து அமைதியாக பிரார்த்தனை செய்து வர வேண்டும். நுழைவிடத்தில் உள்ள பிரணவ கணபதி சிலை இங்குள்ள ஒரு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். தேசிங்குராஜா வணங்கிய கணபதியாக இது கருதப்படுகிறது. கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் வலம்புரி விநாயகர் ஆவார்.
  தல வரலாறு:
சனீஸ்வரருக்கு ஒரு கால் ஊனம் என்பது அறிந்த விஷயம். தனக்கு கிடைக்காத சாகாவரம் தனக்கு பிறக்கப்போகும் மகன் இந்திரஜித்திற்காவது கிடைக்க வேண்டும் என ராவணன் விரும்புகிறான். இதற்காக கடும் தவம் செய்கிறான். தேவர்கள் கவலை கொள்கின்றனர். கிரகங்களெல்லாம் ராவணனுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில், சனியின் பார்வை குழந்தையின் மீது பட வழியே இல்லாமல் போகிறது. நாரதர் சனீஸ்வரனிடம், "எப்பாடு பட்டேனும் குழந்தையை ஒருமுறை பார்த்து விடு," என்கிறார். அதன்படி, குழந்தை பிறக்கவும் சனீஸ்வரன் பார்த்து விடுகிறார். பாடுபட்டு செய்த தவம் வீணாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் சனியின் காலில் அடித்து ஒடித்தான் ராவணன். இதன்பிறகு சனி நொண்டிக் கொண்டே நடக்க வேண்டியதாயிற்று. அவரது கால் கட்டையானது என்றும் சொல்வர். இதன்படி சனீஸ்வரரின் ஒரு கால் காக வாகனத்தில் இருப்பது போல சிலை வடிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:


அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்,பஞ்சவடீ,விழுப்புரம்

  
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்
[Image1]
மூலவர்:ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:-
தீர்த்தம்:-
ஆகமம்/பூஜை:-
பழமை:500 வருடங்களுக்குள்
புராண பெயர்:-
ஊர்:பஞ்சவடீ
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
 திருவிழா:
ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி
 தல சிறப்பு:
இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 7 முதல் இரவு 8 மணி வரை (இடையில் நடை அடைப்பு இல்லை)
முகவரி:
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், பஞ்சவடீ - 605 111. விழுப்புரம் மாவட்டம்.
போன்:
+91- 413 - 267 1232, 267 1262, 267 8823
 பொது தகவல்:
12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் விநாயகரும், இடதுபக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன்,பரதன் ஆகியோரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர கோபுரம். அதன் மீது 5 அடி உயர கலசம். மூலவர் 36 அடி உயரத்தில் நின்ற கோலம். இவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு பிரமாண்டமான லிப்ட். இவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 1008 லிட்டர் பால் தேவை. இங்கு 1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது. இதனை ஒலிக்கச்செய்தால் குறைந்தது 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும். 18 மீட்டர் அகலமும், 40 மீட்டர் ஆழமும் கொண்ட பிரமாண்ட தீர்த்த கிணறு. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம். இப்படி ஆஞ்சநேயரைப்போலவே அனைத்தும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
மன அமைதி கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 தலபெருமை:
பஞ்சமுகத்திற்கான காரணம் : ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி,"இன்று போய் நாளை வா' என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர்' விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா' என்றும் அழைக்கப்படுகிறார்.

தல சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ராமர் பாதுகை : ராம பாத தரிசனம் என்பது விசேஷமானது. இக்கோயிலில் ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் போடப்பட்டுள்ளது.

ராமாயண கால மிதக்கும் கல் : சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற இரு வானரங்கள் இந்த பாலப்பணியை நடத்தின. இதில் நளன் என்பவன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு,"என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,'' என வரம் கொடுத்தார். இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. ராமருக்கு உதவி செய்ய, பாலம் கட்ட பயன்படுத்திய கற்களை மிதக்க செய்து, அசையாமல் பாதுகாத்தான் கடலரசன் சமுத்திரராஜன். இவன் மகாலட்சுமியின் தந்தை ஆவான். எனவே சீதையை மீட்க இந்த உதவியை செய்தான் என கூறப்படுகிறது. இப்படி ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.

லட்டு லிங்கம் : ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்பதற்கேற்ப இக்கோயிலில் "லட்டு லிங்கம்' செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. 2007 ஜனவரி 1 அன்று, புத்தாண்டை குறிக்கும் வகையில் 2007 கிலோ எடையில் லட்டு லிங்கம் செய்யப்பட்டு செய்து அன்றைய தினம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
  தல வரலாறு:
:"ரமணி அண்ணா" இவர் தான் இத்தலம் உருவாவதற்கு முழு காரணமானவர். இவர் கூறுகையில்,"பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த பஞ்சவடீயில் பல சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்துள்ளனர். இங்கிருந்தபடியே பல ரிஷிகள் வேதசாஸ்திரங்களை பலருக்கு உபதேசம் செய்துள்ளதாகவும் தேவ பிரசன்னத்தில் தெரிந்தது. இதன் அடிப்படையில் கோயில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.ஆஞ்சநேயர் என்றாலே மாபெரும் சக்திபடைத்தவர் என்பதற்கேற்ப, ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின் இவருக்கான சிலை அமைக்க 150 டன் எடை கொண்ட கருங்கல், செங்கல்பட்டு அருகே சிறுதாமூர் எனும் ஊரில் கிடைத்தது. இந்த கல்லைக்கொண்டு மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக 11 கிலோ எடையுள்ள யந்திரம் தயார் செய்து அதை திருப்பதி, காஞ்சிபுரம், சிருங்கேரி, அஹோபிலம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டு, ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் வைத்து ஜுன் 12, 2003 காலை 5.55 மணிக்கு "ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்" சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது,''என்றார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார். ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள். 

7. அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்,
பஞ்சவடீ
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்
மூலவர்:ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
இருப்பிடம்:புதுச்சேரியிலிருந்து (10 கி.மீ) திண்டிவனம் செல்லும் வழியில் பஞ்சவடீ அமைந்துள்ளது.
போன்:+91- 413 - 267 1232, 267 1262, 267 8823
பிரார்த்தனை:
மன அமைதி கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. ...
சிறப்பு:இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் ...