நெல்லையப்பர் ஆலயம் - திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயம் - திருநெல்வேலி

ஆச்சரியமான பல சிற்பங்களை உள்ளடக்கிய ஆலயம். வெளியிலிருந்து 
பார்த்தபோது சிறிய கோயிலாயிருக்குமென எண்ணியது எவ்வளவு பெரிய 
தவறு என  நுழைந்ததுமே உணரவைத்தது. 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலயம்.

கோயில் அமைப்பு:

850 அடி நீளம், 756 அடி அகலம் கோயிலின் எல்லை. அம்மன் கோயில், சுவாமி 
கோயில் என சமமான பிரிவைக் கொண்டது. தெற்குப் பிரகாரத்தின் நீளம் 387, 
அகலம் 42 அடி. கொடி வாகனங்கள், தோரணங்கள் வைக்கப்படும் அறைகள் 
உள்ளன. முன்னால் உள்ள தூண்களில் பிள்ளையன் காலம் வரை அரசாண்ட 
நாயக்க மன்னர்களின் சிலைகள் உள்ளன. மதுரை புதுமண்டபச் சிற்பங்கள் போலுள்ளன.

மேற்குப் பிரகாரத்தின் நீளம் 295, அகலம் 40 அடி. நடுவில் மேலக்கோபுரம் இருக்கிறது. 
சுதையில் உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிலையும், வெள்ளிக்கோரத மண்டபமும் 
குறிப்பிடத்தக்கவை. வடக்குப்பிரகாரத்தின் நீளம் 387, அகலம் 42 அடி. நின்றசீர் 
நெடுமாறன் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுகாலத் தீர்த்தகுண்டம் 
உள்ளது. ஈசானத்திக்கில் யானைக்கூடம் காணப்படுகிறது.

கிழக்குப் பிரகாரத்தின் நீளம் 295, அகலம் 40 அடி. இதன் வடக்குத் திசையில் 
78 வருணத்தூண்களுடன் கூடிய சோமவார மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்பக்கம்
 வன்னியடிச்சாத்தனார், வயிரவர் சன்னிதிகள்,  யாகசாலை உள்ளன. ரிஷப 
மண்டபத்திற்கு வடக்கே நவக்கிரக மண்டபம் உள்ளது. சிவன் சன்னிதிக்கு 
முன்னதாக பிள்ளையார், முருகன் சிலைகள் உள்ளது. 


கோயிலின் பெருமை:

அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் முதலில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும்,
 பின்னர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டது. 
சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் 
இவற்றின் அமைப்பு பழங்காலத் தமிழர் சிற்பக்கலைச் சின்னமாகும்.

சீபலி மண்டபப் பிரகாரத்தில் உள்ள ஆறுமுக நயினார் விக்கிரகம் ஒரே 
கல்லில் மயில் வாகனத்தோடும், தேவியர்களோடும் விளங்குவது தமிழரின் 
சிற்பக்கலைக்கு சிறந்த சான்று.

காந்திமதி அம்மன் கோயில்:

ஆலயத்தின் முகப்பில் அம்மன் அம்பலம் ஒன்றுள்ளது. இது திரிபுரம் சிவராம 
காசியாபிள்ளையால் கட்டப்பட்டது. கோபுரம் கி.பி 1626 ல் எழுப்பப்பட்டது. 
சுவாமி கோயில் கோபுரம் எழுப்பப்பட்டு இருபது ஆண்டுகள் கழித்து இந்தக் 
கோபுரம் அமைக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும் ஊஞ்சல் மண்டபம் உள்ளது.


கல்வெட்டுகள்:

மிகப் பழமையான கல்வெட்டு கி.பி 950 ல் இருந்த வீரபாண்டியன் சாசனங்கள் ஐந்து. 
இவை வட்ட எழுத்தில் எழுதப்பட்டவை. கல்வெட்டுகள் பாண்டியர்கள் சோழர்களை
 வென்றதாகச் சொல்கிறது.


ஆலயத்தின் சிறப்பைப் இடுகையின் நீளத்தைக் கருதி நிறுத்துகிறேன். நெல்லைச் 
சிற்பச் சிறப்புகள் குறித்து மற்றொரு இடுகை விரைவில்!

திருநெல்வேலி - நெல்லையப்பர் ஆலயம்

திருநெல்வேலி - நெல்லையப்பர் ஆலயம்
****************************************************************

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஆச்சரியமான பல சிற்பங்களை உள்ளடக்கிய ஆலயம். வெளியிலிருந்து பார்க்கும் போது சிறிய கோயிலாயிருக்குமென எண்ணினால் அது எவ்வளவு பெரிய தவறு என உள்ளே நுழைந்ததுமே உணரவைக்கும். 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலயம். தமிழகத்துக்கே உரித்தான கட்டிடக்கலை அம்சத்துடன் பல சிறப்புகள் வாய்ந்தது இத்திருக்கோவில். இங்குள்ள இசைத்தூண்கள் இத்திருக்கோவிலுக்கான தனி அடையாளம்.

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும். சிவபெருமானுக்கும், காந்திமதி தாயருக்கும் திருமணம் நடந்த போது, கன்னி தானம் செய்ய திருமால் திருநெல்வேலிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்திருக்கோவிலைச் சுற்றியுள்ள ஊர்களிலேயே நவதிருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது தளங்கள் உள்ளன. 

கோயிலின் மூலக்கதை 


முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். 

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது

ஊர்ப்பெயர்க் காரணம் 


முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். திருநெல்வேலி என்ற பெயர் வருவதற்கும் இச்சம்பவமே காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

கோயில் அமைப்பு

*ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

* கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

* இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

* மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இது போல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

சீபலி மண்டபப் பிரகாரத்தில் உள்ள ஆறுமுக நயினார் விக்கிரகம் ஒரே கல்லில் மயில் வாகனத்தோடும், தேவியர்களோடும் விளங்குவது தமிழரின் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று.

சிறப்புக்கள் 
* சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. 

* சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. 

*திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது § அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது., 

*சொக்கநாபிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 

* 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம் அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் முதலில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பின்னர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டது. சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் இவற்றின் அமைப்பு பழங்காலத் தமிழர் சிற்பக்கலைச் சின்னமாகும். சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் வீடாக இத்திருக்கோவில் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலுக்கு அருகில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

கல்வெட்டுகள்: மிகப் பழமையான கல்வெட்டு கி.பி 950 ல் இருந்த வீரபாண்டியன் சாசனங்கள் ஐந்து. இவை வட்ட எழுத்தில் எழுதப்பட்டவை. கல்வெட்டுகள் பாண்டியர்கள் சோழர்களை வென்றதாகச் சொல்கிறது.

ஆன்மீக சிந்தனையில் அடியேன் 
-கணேசன் பாண்டிச்சேரி-

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்
<><><><><><><><><><><><><><><><><><><><>

ஆசை ஆசையாய் காதலித்து கை பிடித்த கணவனை சில பெண்கள் மாயா சதி வலையில் விழவைத்து கணவன் மனைவிகளை பிரித்துவிடுவர் ,தம்பதிகளை பிரிக்க எத்தகைய சதி செய்தாலும் அவர்களின் செயல்கள் யாவற்றையும் சக்தி வாய்ந்த இடமுண்டு 

தம்பதிகள் இணைபிரியாமல் ஒன்றாய் வாழ்வதற்கும் நன்றாய் வாழ்வதற்கும்
அந்த வாஸ்து சக்தி நிறைந்த இடம் ஸ்ரீ வரகூர் வெங்கடேசபெருமாள் கோவில்
இங்கு பெருமாள் யாராலும் பிரிக்கமுடியாதபடி ஆதரவாக பிராட்டியாரை அணைத்தபடி உள்ளார் பிராட்டியும் தன்னை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாதபடி அன்பொழுக தழுவியுள்ளார் 


இத்தலத்துக்கு பெண்கள் வந்து ஒன்பது கஜசேலையை பிராட்டிக்கு சாற்றி 108 மஞ்சள் தானமாக அளித்தால் எந்த தீய சக்தியும் கணவன் மனைவியை பிரிக்க முடியாது 

இன்று வரகூர் என்று அறியப்படும் இந்த ஊரின் பழைய பெயர் பூபதிராஜபுரம் . குடமுருட்டியாறு காவிரியின் கிளை ஆறு. குடமுருட்டி ஆற்று கரையில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது .ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற மகான் கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற மகா காவியத்தை வரகூரில் தான் படைத்தார். 

ஆந்திரத்தை சேர்ந்த நாராயண தீர்த்தர் ஒரு நதியை கடக்கும் போது ஏற்பட்ட திடீர் வெளள் பெருக்கால் தெற்கு நோக்கி பயணம் செய்கிறார். குடமுருட்டி ஆற்றை கடக்கும் பொது கடும் வயிற்று வலியால் .அவதிபடுகிறார். அன்று கனவில் தோன்றிய கடவுள் ஒரு வெள்ளை வரஹத்தை (பன்றி ) பின் பற்றி செல்ல கட்டளையிடுகிறார்.அந்த வராகம் பூபதிராஜபுரத்தில் உள்ள பெருமாள் கோவில் உட்புறம் சென்று மறைந்து விடுகிறது.

அன்று முதல் ஊர் பெயர் வராஹபுரி என்று மாறி பின்பு மறுகி வரகூர் என்று இன்று அறியபடுகிறது என்பது இந்த ஊரின் தல வரலாறு .தன பிணி நீங்கியதை உணர்ந்த நாராயணர் வரகூரில் தங்கி மகாபாரதத்தில் உள்ள சாரத்தை உள்ளடக்கி கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற காவியத்தை வடமொழியில் படைக்கிறார். நாராயணர் வரகூரில் தங்கி தான் இயற்றிய பாடல்களை பாடிய பொழுது திரைக்கு பின் பெருமாள் நடனமாடியதாகவும் ,சலங்கை சத்தம் கேட்டதாகவும் சொல்லபடுகிறது . 

இன்னொரு சிறப்பு அனுமார் தாளம் போட்டதாவகவும் சொல்லபடுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர்.இந்த கோவிலில் கிருஷ்ணா ஜெயந்தி பெரிய திருவிழாவாக கொண்டாடபடுகி.றது வரகூர் கோவிலின் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம் . வரகூர் பெருமாளின் பெயர் லக்ஷ்மிநாராயணர் .லக்ஷ்மி பெருமாளின் இடது தொடையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். குழந்தை வரம் வேண்டுவோர் பெருமாள் காலடியில் வைத்து வேண்டிய கொலுசை அணிவது இங்கு வாடிக்கை. 

இன்னொரு சிறப்பு பெருமாள் கோவிலின் மிக அருகிலேயே சிவன் கோவிலும் உள்ளது . பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவிலில் ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் 

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள்

திருக்கோயில்நடுக்காவேரி வரகூர் 613 101, தஞ்சை மாவட்டம்+91 4362 280856 94436 74911 94428 52145


தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் நடுக்காவேரியைத் தாண்டியவுடன் 
கருப்பூருக்கு அடுத்து உள்ள தலம். பூதலூர் ரயில் நிலையத்திலிருக்து 7 
கி.மீ. இருப்பினும் சாலை வழி வசதிகள் குறைவாக உள்ளதால் பூதலூரிலிருந்து 
வருவதைக் காட்டிலும் தஞ்சையிலிருந்து வரலாம். தஞ்சையிலிருந்து 25 கி.மீ. 
திருவாற்றையிலிருந்து 15 கி.மீ. செந்தலைக்குத் தெற்கே உள்ளது. தஞ்சை பஸ் 
நிலையத்திலிருந்து கண்டியூர், நடுக்காவேரி, இந்தலூர், இளங்காடு, பூண்டி 
மாதா கோவில் செல்லும் பேருந்துகள் வரகூர் கிளைப்பாதை வழியாக செல்கின்றன. 
காலை 4 மணி முதல் இரவு 1 மணி வரை பேருந்துகள் உண்டு.ஸ்ரீ
லட்சுமி நாராயணர் ஸ்ரீ மகாலட்சுமித் தாயார் வீற்றிருந்த கோலம் கிழக்கு 
திருமுகம் ஸ்ரீ வெங்கடேசர் பூமிதேவி, ஸ்ரீதேவித் தாயார்
பிரதி வருடம் காயத்ரி ஜபம் தொடங்கி ஆவணி மாதத்தில் 10 நாட்கள் உறியடி 
உற்சவம் வழுக்குமரப் போட்டியிடன் நடைபெற்று கோகுலாஷ்டமியுடன் இணைத்து 
விமரிசையாக நடைபெறுகிறது. ருக்மணி கல்யாணமும் ஹனுமத் ஜெயந்தியுடன் நிறைவு 
பெறுகிறது.

திறக்கும் நேரம்: 6.00 முதல் 12.15,மாலை 5.00 முதல் 08.15 வரை
.

ஆன்மீகச்சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில்


இன்றைய இந்தியாவின் தமிழகத்தில், விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ்ரீமுஷ்ணம் என்னும் திருத்தலம். ஆதி வராஹ பெருமாள் திவ்யமான பன்றி ரூபத்தில் தோன்றியதால், இவ்விடம் வராஹ க்ஷேத்திரம் என்று போற்றப்படுகிறது. சைதன்ய மஹாபிரபுவின் தென்னிந்திய பயணத்தின்போது, இவ்விடம் விருத்தகோலா என்று அறியப்பட்டது; வராஹ பெருமாள் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்வ்யக்த க்ஷேத்திரம் என்றும் இவ்விடம் புகழப்படுகிறது. இத்திருக்கோயிலின் வரலாற்றை அறிவதற்கு முன் வராஹ அவதாரத்தின் பின்னணியைச் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம்.
வராஹ அவதாரம்
பன்னெடுங் காலத்திற்கு முந்தைய யுகம் ஒன்றில், ஒருநாள் மாலை வேளையில் மரீச்சியின் புதல்வரான கஷ்யப முனிவர், பகவான் விஷ்ணுவை வழிபட்டுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் தக்ஷனின் மகளான திதி தன் கணவரான கஷ்யபரை அணுகி தன் காம இச்சைகளை உடனடியாகத் தணிக்கும்படி மன்றாடினாள். திதியின் வற்புறுத்தலினால், அந்த அமங்களகரமான மாலை வேளையில் கஷ்யப முனிவரும் திதியும் ஒன்று கூடினர்; இருப்பினும், தவறான நேரத்தில் ஒன்று கூடியதை நினைத்து திதி வருத்தப்பட்டு அழுதாள். அப்போது கஷ்யப முனிவர், உனக்குப் பிறக்க இருக்கும் இரு புதல்வர்கள் உலகையே அச்சுறுத்தும் அசுரர்களாக இருந்தாலும், உன் பேரன்களில் ஒருவன் (பிரகலாதன்) சிறந்த ஹரி பக்தனாகத் திகழ்வான்," என கூறி திதியைத் தேற்றினார்.
திதி தன் இரு அசுர குழந்தைகளான ஹிரண்யாக்ஷனையும் ஹிரண்யகசிபுவையும் தன் கருவில் 100 வருடம் சுமந்தாள். இந்த இரு அசுர குழந்தைகளும் பூமியில் பிறப்பதற்கு காரணமாக வைகுண்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடைபெற்றது.
நான்கு குமாரர்களின் சாபம்
ஸனக, ஸனந்தன, ஸநாதன, ஸனத்குமார என்னும் நான்கு குமாரர்களும் ஒருநாள் நாராயணரை தரிசிப்பதற்காக வைகுண்டம் சென்றனர். அப்போது வாயிற் பாதுகாவலர்களான ஜெயன், விஜயன் ஆகிய இருவரும் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபம் அடைந்த நான்கு குமாரர்கள் ஜெயன், விஜயனை பௌதிக உலகில் பிறக்கும்படி சபித்தனர். இச்செய்தியை அறிந்த நாராயணர் வைகுண்டத்தின் நுழைவாயிலுக்கு விரைந்தார். ஜெயன், விஜயனின் எஜமானர் என்கிற முறையில் தன் சேவகர்களின் தவறுக்காக நாராயணர் நான்கு குமாரர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டார். அதன் பின், ஜெயன், விஜயனிடம், பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு எனது எதிரியாக பிறக்க விருப்பப்படுகிறீர்களா, ஏழு பிறவிகளுக்கு எனது நண்பராக இருக்க விருப்பப்படுகிறீர்களா?" எனக் கேட்டார்.
வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை ஏழு பிறவிகளுக்கு பிரிந்திருப்பதை விட மூன்று பிறவியில் எதிரியாக செயல்பட்டு விரைவாக வைகுண்டத்திற்கே வந்து விடும் நோக்கத்தில், அவர்கள் இருவரும் அசுரர்களாகச் செயல்பட முன் வந்தனர். அப்போது, நான்கு குமாரர்களின் சாபம் தன்னால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் தன்னுடைய விருப்பமும் அதுவே என்றும் நாராயணர் தெரிவித்தார். பகவான் நாராயணரின் திட்டத்தைத் தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த நான்கு குமாரர்கள், நுழைவாயிலில் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதும் பகவானின் விருப்பமே என உணர்ந்தனர்.
மூன்று பிறவி அசுரர்கள்
வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான ஜெயன், விஜயன் முதற் பிறவியில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்றும், இரண்டாவது பிறவியில் இராவணன், கும்பகர்ணன் என்றும், மூன்றாவது பிறவியில் சிசுபாலன், தண்டவக்ரன் என்றும் பிறப்பெடுத்தனர். வைகுண்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே பக்தர்கள் என்பதால், நாராயணரால் அங்கே யாரிடமும் சண்டையிட முடியாது. அதே சமயம், யாரிடமாவது சண்டையிட வேண்டும் எனும் பகவான் நாராயணரின் விருப்பம், அவர் பௌதிக உலகில் அவதரிக்கும்போது நிறைவேறுகிறது.
அதாவது, தன்னிடம் கடுமையாக சண்டையிடுவதற்குத் தகுதி வாய்ந்த நபர்களை பகவான் நாராயணரே தேர்ந்தெடுக்கிறார். இருப்பினும், ஜெயன், விஜயன் ஆகிய இருவரும் பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு அசுரர்களாக செயல்பட்ட நிகழ்ச்சி, பிரம்மாவின் நாளில் ஒருமுறை மட்டுமே நடைபெற்ற நிகழ்ச்சியாகும். அதாவது, பகவான் பௌதிக உலகில் அவதரிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஜெயன், விஜயன் தோன்றுவதில்லை. பகவானுடன் போரிடும் அளவிற்கு தகுதி வாய்ந்த அசுரர்கள் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிரிகளாகச் செயல்படுகின்றனர்.
ஹிரண்யாக்ஷன் பிரம்மாவிடம் வரம் பெறுதல்
ஜெயன், விஜயன் ஆகிய இருவரும் தங்களது முதல் பிறவியில், கஷ்யபரின் இரு மகன்களாகப் பிறந்தனர். கஷ்யபர் அவர்களுக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என பெயரிட்டார். இந்த இரு அசுர சகோதரர்களும் பௌதிக உலகில் பிறந்தபோது, இயற்கையின் சீற்றங்களான பூகம்பம், பலத்த காற்று, அசுப கிரகங்கள் பலம் பெறுதல், சூரிய சந்திர கிரகணங்கள் மாறி மாறி தோன்றுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன. நரி ஊளையிடுதல், பயத்தில் மாடுகள் உறைந்து போகுதல் போன்ற அபசகுனங்களும் தென்பட்டன.
ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரும் கடுந்தவம் மேற்கொண்டு, ஏறக்குறைய சாகா வரத்தைப் போன்ற ஒரு வரத்தை பிம்மாவிடம் பெற்று, கர்வத்தினால் மூவுலகையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர். ஹிரண்யாக்ஷனின் வருகையைக் கண்ட இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் தங்கள் லோகத்தை கைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். இந்திர லோகமும் காலியாக இருப்பதை கண்ட ஹிரண்யாக்ஷன் தேவர்கள் சண்டை போடாமலேயே தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டனர் என எண்ணி பெருமிதம் கொண்டான். சுவர்க்க லோகத்தை விட்டு ஹிரண்யாக்ஷன் சமுத்திரத்தினுள் சென்றபோது, அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பயத்தில் நீரை விட்டு வெளியே சென்றன.
பின் வருண தேவரின் தலைநகரான விபாவரிக்கு சென்ற ஹிரண்யாக்ஷன் வருண தேவரைத் தன்னுடன் சண்டையிடும்படி கேட்டுக் கொண்டான். ஹிரண்யாக்ஷனின் கர்வத்தைக் கண்ட வருண தேவர், தனக்கு வயதாகி விட்டதென்றும், விஷ்ணுவே சண்டையிடுவதற்குத் தகுதியான நபர் என்றும் அவனிடம் தெரிவித்தார். பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்தை நாரதரின் மூலமாக அறிந்து கொண்ட ஹிரண்யாக்ஷன் அவரைத் தேடி புறப்பட்டான்.
பூமியை மீட்ட வராஹர்
ஹிரண்யாக்ஷன் பூலோகத்தை கர்போதக கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்து பிரம்மாவை நாடினர். பிரம்மா பூலோகத்தை எவ்வாறு மீட்க முடியும் என தியானித்தபோது அவருடைய வலது நாசியில் இருந்து கட்டை விரல் அளவிலான பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி அவதாரம் தன் உருவத்தின் அளவை அதிகரித்து கொண்டே செல்வதைப் பார்த்த தேவர்கள் அதிசயித்தனர். பகவான் விஷ்ணுவே பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என உணர்ந்த தேவர்கள் அச்சத்தைக் கைவிட்டு உறுமிக் கொண்டிருந்த வராஹரைப் பார்த்து துதி பாடினர்.
இயல்பாக பன்றிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பதால், கர்போதக கடலுக்குள் இருக்கும் பூமியை மீட்கும் பொருட்டு, வராஹர் நுகர்ந்து கொண்டே நீருக்கடியில் சென்றார். பூலோகத்தையே தன் சிறு கோரைப்பற்களால் தாங்குமளவிற்கு வராஹரின் உடல் பெரிதாக இருந்தது. ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிகவும் சாதுர்யமாக வராஹர் அதனைத் தன் கோரைப்பற்களால் சுமந்து நீருக்கு வெளியில் எடுத்து வந்து தன் அசிந்திய சக்தியினால் மிதக்க வைத்தார்.
கடுமையான யுத்தம்
கடலுக்குள் மூழ்கடித்த பூமியை ஒரு பன்றி சுமந்து கொண்டு நீருக்கு வெளியே வருவதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் பாம்பைப் போல சீறினான். தன் கையில் இருந்த கதையினால் வராஹரைத் தாக்க ஹிரண்யாக்ஷன் முயன்றான். அப்போது வராஹருக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் கடுமையான போர் மூண்டது. சில சமயம் ஹிரண்யாக்ஷனின் கை ஓங்குவதைக் கண்ட தேவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் வராஹரின் கையில் இருந்த கதையை கீழே தள்ளிய ஹிரண்யாக்ஷன் வராஹரை நிராயுதபாணியாக ஆக்கிவிட்டான்.
அதனால் கடுங்கோபம் அடைந்த வராஹர் உடனடியாக சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் உடனடியாக ஆகாயத்திற்கு பறந்த வண்ணம் கதையினால் வராஹரைத் தாக்க முன் வந்தான். கதை, சூலம் ஆகிய ஆயுதங்கள் மட்டுமின்றி அவர்கள் இருவரும் கைகளாலும் சண்டையிட்டனர். யோகேஷ்வர வராஹரிடம் ஹிரண்யாக்ஷன் பல மாயாஜால வித்தைகளை அரங்கேற்றினான். சுதர்சன சக்கரத்தை ஏவிய வராஹ பகவான் அனைத்து மாயாஜாலங்களையும் நொடிப் பொழுதில் அழித்தார். தன் மாயாஜால வேலைகள் பலிக்கவில்லை என்பதை உணர்ந்த ஹிரண்யாக்ஷன் தனது பலமான இரு கைகளால் பகவானைத் தழுவி நசுக்க முன் வந்தான். வராஹ பகவான் அவனது காதில் பலமாக அறைவிட்டபோது, ஹிரண்யாக்ஷன் விழி பிதுங்கி, கை உடைந்து, வேரோடு பெயர்த்தெடுத்த மரத்தை போன்று கீழே விழுந்தான்.
பிரம்மாவும் இதர தேவர்களும் அங்கு விரைந்து பூமழை பொழிந்தனர். ஹிரண்யாக்ஷனின் உயிர் பிரியாத நிலையில் பகவான் வராஹரின் திருப்பாதம் அவனது நெஞ்சில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பிரம்மா, யாருக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டமான மரணம் கிட்டும் என எண்ணி வியந்தார். யோகிகளும் ஞானிகளும் பகவானின் திருப்பாதங்களைத் தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த அசுரனுக்கோ பகவான் வராஹரின் திருப்பாதங்கள் உடலில் தொட்ட வண்ணம் உடலை நீக்கும் பாக்கியம் கிட்டியது.
கோயிலின் அமைப்பு
ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகிய க்ஷேத்திரங்களுடன் இணைந்து, ஸ்ரீமுஷ்ணம் எட்டு முக்கிய சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பூவராஹ சுவாமி திருக்கோயிலின் முகப்பானது கம்பீரமான எழில்மிகு ராஜகோபுரத்தின் அமைப்பைக் கொண்டுள்ளது. கோயிலில் இருக்கும் மூல விக்ரஹத்தை தரிசிக்கும் முன் ஸ்ரீநிவாஸ பெருமாளையும் அவரது திருவடிகளையும் தரிசித்து செல்ல வேண்டும். கோயிலின் தென் கிழக்கு திசையில் அரச மரமும் நித்ய புஷ்கரணியும் அமைந்துள்ளது.
இக்கோயிலில் முதன்மையான விக்ரஹத்திற்கு மேல் பாவன விமானம் அமையப் பெற்றுள்ளது. வராஹ பெருமாள் ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வெடுத்த போது அவர் உடல் வியர்வையே நித்ய புஷ்கரிணி என்னும் புனித தீர்த்தமாக மாறிவிட்டது. ஹிரண்யாக்ஷனை வதம் செய்த பின்னர், பகவான் வராஹரின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி ஆனந்தக் கண்ணீரானது அரச மரமாக உருவெடுத்தது. இக்கோயிலில் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், வேணு தீர்த்தம், மிருத்யுஞ்சய தீர்த்தம் என பல தீர்த்தங்கள் விசேஷமாக காணப்படுகின்றன.
பூவராஹ சுவாமி
பூவராஹ சுவாமி முதன்மையான விக்ரஹமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தன் இடுப்பில் இருக்கும் சங்கு, சக்கரத்தைத் தன் இரு கைகளால் மறைத்த வண்ணம், உடல் மேற்கு திசையை நோக்கியும், முகம் தெற்கு திசையை நோக்கியும் அமையப்பெற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு யக்ஞ வராஹர் உற்சவ மூர்த்தியாகவும், தாயார் அம்புஜ வல்லியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கடலில் இருந்து பூமியை வெளியே கொண்டு வந்து தேவர்களின் துயரைத் துடைத்து மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் செல்ல வராஹர் எண்ணியதாகவும், பூதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாகவும் நாரத புராணம் கூறுகின்றது. பூதேவியுடன் கூடி வசிப்பதால் வராஹப் பெருமாளுக்கு பூவராஹன் என்று பெயர். நான்கு தலை கொண்ட பிரம்மா இங்கு தினந்தோறும் பூவராஹ சுவாமியை தரிசிக்கிறார் என்பது கோயில் ஐதிகம். தினந்தோறும் இக்கோயிலில் கஜேந்திர மோஷம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் புராணத்தைப் பாராயணம் செய்கின்றனர்.
நித்ய புஷ்கரிணியில் ஸ்நானம் செய்த பின்னர் அரச மரத்தின் கீழ் அல்லது புறக்கரையில் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் சன்னதி அருகே ஹரி நாமத்தை உச்சரிப்பது விசேஷமானதாகும். இக்கோயிலில் வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். பகவான் திவ்யமான பன்றி ரூபத்தில் வீற்றிருப்பதால் பெருமாளுக்குக் கோரைக் கிழங்கு இங்கு விசேஷமாக நைவேத்யம் செய்யப்படுகிறது. ஹிரண்யாக்ஷனின் புதல்வியான ஜில்லிகா என்பவள் விஷ்ணு பக்தி கொண்டவள் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹாபிரபுவின் தென்னிந்திய பயணம்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சுமார் 500 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய பயணத்தை மேற்கொண்டபோது, தற்போதைய தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், கும்பகோணம்,ஶஸ்ரீரங்கம், மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவட்டாறு ஆகிய க்ஷேத்திரங்களின் வழியாக பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சைதன்ய மஹாபிரபு தரிசித்த கோயில்கள் மட்டுமின்றி, அவர் சில நொடித்துளிகள் லீலைகளை அரங்கேற்றிய இடங்களைக்கூட கௌடீய வைஷ்ணவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும் என ஸ்ரீல பக்திவினோத தாகூர் வலியுறுத்துகின்றார். இந்த புனித க்ஷேத்திரத்திற்கு செல்பவர்கள், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தினை உச்சரிப்பதால், அவர்களின் யாத்திரை முழுமைப் பெறும்.

அத்திரி மகரிஷி மலை

அத்திரி மகரிஷி மலை

 அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி
 சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு 
கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து செல்லவேண்டும்
, அல்லது ஆழ்வார்குறிச்சியிலிருந்து ஆட்டோவசதி உள்ளது. ஆட்டோவில் 
சென்றால் நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் பெற்றுக்கொண்டு
 5 அல்லது 6 பேரை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். 
ஆட்டோவைபேசினால் 150 ரூபாய் 
அல்லது 200 ரூபாய் என பலிக்கும் அளவுக்கு பெற்றுக்கொண்டு 
கடனாநதி அணைக்கட்டு வரை கொண்டுசெல்கிறார்கள். இதை 
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கவணித்து கட்டணத்தை முறைப்படித்தினால்
 நன்றாக இருக்கும். மேலும் பத்தர்கள் திரும்பி வருவதற்க்கு, போகும் 
பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கிவைத்துக்கொண்டால் 
நாம் மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன்செய்து அழைத்தால் 
ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள். மலைமேல் 
விசேசநாட்களில் மட்டுமே மதியம் அன்னதான உணவு கிடைக்கும், 
காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ளவேண்டும், 
அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள்
 சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக்பைகள் 
அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே தகுந்தாற்ப்போல் 
செய்துகொள்ளவேண்டும். அணைகட்டில் வாகனத்திலிருந்து 
இறங்கியவுடன் பார்த்தால் பெரிய புலியின் படத்தை போட்டு
 புலிகளின் சரணாலயம் 
என்றும் நம்மை விழிப்புடன் பயணம் செல்ல அறிவுறுத்துகிறார்கள். 
மேலும் பயணத்தின் தொடக்கத்திலேயே வனத்துறையினர் நம்மை 
சோதனை செய்த பின்பே பயணத்திற்க்கு ஒரு நோட்டில் கையெழுத்தை
 பெற்றுக்கொண்டு அனுமதிக்கிறார்கள். 
 கடனா நதி அணை
 கடனா நதி நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீர் குறைவாக ஊள்ளதால் 
மக்கள் அதை குறுக்கு பாதையாக பயண்படுத்துகிறார்கள்.
    மலைக்குள் நடந்து 
செல்லும் குறுகலான பாதை  கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை
 நடப்பதற்க்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது 
மட்டுமே ஒரு பதினைந்து நிமிட ஏற்றமுள்ள பாதை உள்ளது. அந்த 
ஏற்றமும் பாறைகள் இல்லாத மண்பாதையாகவே உள்ளது, எனவே
 மழை காலங்களில் வழுக்கும்படியாக உள்ளது. அதன் அருகில் 
பெரியபாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் 
தவமிருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையுள் 
தீபமேற்றி வழிபடுகிறார்கள்.                                                                                                                             
 வன துர்க்கை                                                                                                                                       
        கோவில்   முன்புறமுள்ள  மைதானம்  பக்தர்கள் தங்குவதற்க்கு 
மிகவும் வசதியாக உள்ளது. அதன் மைய பகுதியில் உள்ள விளக்கு தூண்.                                                                                                                                                               
             கருவறையின் முன் மண்டபம்,  அதன் வாசல் நிலை
 போல்  இருபுறமும்  புளியமரங்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன                                                                                                                                                   
அருள்மிகு அனுசுயாதேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் 
கருவறையில் லிங்கவடிவில் காட்சியளிக்கின்றனர். இங்கு அனுசூயாதேவி
 அம்மன் அட்டமாசித்திகளை குறிக்கும்படியாக எட்டுபட்டையான லிங்க 
வடிவில் உள்ளார்.அதன் முன்பக்க பட்டையில் திரிசூலமும் 
செதுக்கப்பட்டுள்ளது.  இந்த லிங்க அமைப்பு வேறெங்கிலும் இல்லை.
 இதை தரிசிக்க சுவாமிகள் அலங்காரத்தில் இல்லாதபோது மட்டுமே 
முடியும்.அனுசுயா தேவியும், அத்திரி மகரிஷியும் அருள் பாலிக்கிற 
கோயில், யாரிவர்கள்புராணத்திற்குள் நுழைவுதற்கு முன்
ஒரு செய்தி அவர்கள் தமிழகத்து ரிஷிகள். நமது ''சுசீந்திரம்'' 
அத்திரி மகரிஷியின் பூர்வீகம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள் 
இது பற்றி கருத்து தெரிவிக்கவும்


     அருள்மிகு கங்காதேவி சிறிய கிணற்றினுள் அமைக்கப்பட்டுள்ளார்
. கிணற்று அடிபகுதியிலிருந்து நீரூற்று புனித தீர்த்தமாக உற்பத்தியாகி
 வருகிறது, இந்த தீர்த்தத்தில் குளிப்பதாலும், குடிப்பதாலும் உடலிலுள்ள
 வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள்.

அகத்திய முனியும், அத்திரி முனியும்
   அத்திரி மகரிஷி தியானபீடம்,                                                                                                                                                                                                                                                                              
அத்திரி மகரிஷி, அனுசுயாதேவி புராணம்.                                                                                                                                                                                                        
ஒரு சமயம் 

முப்பெரும்தேவியரான சரஸ்வதி, பராசக்தி, லட்சுமி 
மூவருக்கும் கற்பில் சிறந்தவர் யாறென கேள்வி எழுந்தது. 
சந்தேகத்தை தீர்க்க நாரதமுனியிடம் வினாவினார்கள், அதற்கு
 நாரதர் அனுஷயா தேவியை காட்டினார் அதனால் தேவியர்
 மூவருக்கும் தங்களை கூறாது அனுசுயாதேவியை கூறியதால். அனுசுயா 
தேவி மேல் பொறாமையும், கோபமும் கொண்டனர், அதை 
சோதிக்க தங்கள் நாயகர்களைஅனுஷ்யா தேவி வசித்து வந்த 
குடிசைக்கு அனுப்பி வைத்தார்கள். மனைவி சொல்லைத் தட்டாத 
மூவரும் துறவி வேடம்பூண்டு கதவைத் தட்டினர். அந்த வேளை
அத்திரி மகரிஷி நீராடச் சென்றிருந்தார். அனுஷ்யா தேவி
வந்தவர்களை வரவேற்றார். வந்தவர்கள் பசி என்றனர். 
பசிப்பிணி தீர்த்தலை கடமையாகக் கொண்டிருந்த ரிஷி 
பத்தினி உணவு படைக்கத் தயாரானார். சாப்பிடும் முன்பு
மூவரும் ஒரு நிபந்தனை என்றனர். என்ன?’ என்றார் 
அனுசுயாதேவி, ஏற்ப்பாயா? ஏற்றபின் மீறக்கூடாது 
என்று அடுத்தடுத்துக் கேட்டனர். சரி’ என்றார் ரிஷி தேவி.  
நிர்வாண நிலையில் உணவு படையுங்கள்’ என்றனர். தன் தவ 
வலிமையால் வந்தவர் யாரெனவும்வந்த நோக்கமும் 
உணர்ந்த அந்தத் தாய்கணநேரத்தில் சரியெனச் சொன்னார். ஒரு 
கணம் கணவனை வணங்கினார். பின்பு கணவரின் பாதங்களை 
கழுவிய நீரை எடுத்து அவர்கள் மீது தெளித்தார் அடுத்த நொடியே 
துறவிகள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாய் மாறிப்போயினர். 
பிறகென்ன,நிர்வாணமாய் அமுது படைத்தார் அந்த உத்தமப் 
பெண்மணி.  மூவரும் குழந்தைகள் ஆனதால் பிரபஞ்ச இயக்கமே 
ஸ்தம்பித்தது. தேவியர் மூவரும் தத்தம் சக்தியை 
இழந்தனர். நாரதரைக் கெஞ்சிஅனுஷ்யா தேவி காலடி வந்து வணங்கி 
நின்றனர். தங்கள் கணவரை மீட்க வழி கேட்டனர். அழுது 
புரண்டனர். அந்த வேளையில்  அத்திரி மகரிஷியும் வந்து சேர்ந்தார். 
மீண்டும் குழந்தைகள் சிவவிஷ்ணு பிரம்மாவாகினர். இந்தப்
புராணக் கதையின் பின் கதையும் உண்டு. மூன்று 
குழந்தைகளின் ஒருமித்த வடிவேஅத்திரி மகரிஷி, அனுஷ்யா 
தம்பதியினரின் மகனான தத்தாத்ரேயர் எனும் யுகப் புருஷர்  ஆவார்

ஆன்மீக சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி